கோவி மணிசேகரன்
வெகு ஜன இதழ்களில் கோவி. மணிசேகரனின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகின. குமுதம், விகடன், கல்கி, கலைமகள், குங்குமம், இதயம் பேசுகிறது என தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். ’ஒரு தீபம் ஐந்து திரிகள்’ என்பது இவரது நூறாவது நாவல். ராஜராஜ சோழனின் வரலாற்றை கலைமகள் இதழில் ’ராஜநாகம்’ என்ற பெயரில் எழுதினார். கோவி. மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய 'குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூல், 1992ல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.
கோவி மணிசேகரன் 1954-ல் 'கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழில் தான் கோவி. மணிசேகரனின் முதல் வரலாற்று நாவலான 'அக்கினிக் கோபம்’ வெளியானது. அடுத்து 'கலை அரங்கம்’ என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். 'முருகு' மற்றும் 'மங்களம்' போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
நன்றி: தமிழ் விக்கி
Comments