ஆபத்தில் இருந்து காக்கும் வராஹி அம்மன் வழிபாடு..!!*

 *


கஷ்டம் தீர்ந்து செல்வம் செழிக்க வேண்டுமா?: ஆபத்தில் இருந்து காக்கும் வராஹி அம்மன் வழிபாடு..!!*


வராகி அம்மன் பன்றி உருவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். பூலோகத்தை காக்க அவதாரமெடுத்த வராக மூர்த்திக்கு வராகி அம்மன் உதவியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆபத்து வரும் இடத்திலெல்லாம் வராகி அம்மனை வழிபட்டால் நமக்கு உடனே வந்த ஆபத்து நீங்கி விடும் என்பது ஐதீகம். துன்பம் நேரும் போதெல்லாம் வராகி அம்மனை மனதார நினைத்து அழைத்துப் பாருங்கள்.


அவளுடைய மகிமையை நீங்களே உணர்வீர்கள். வராகி அம்மன் ஆபத்திலிருந்து காப்பாற்றுபவள் மட்டுமல்ல சகல செல்வங்களையும் மண்ணால் சம்பந்தப்பட்ட அத்தனை செல்வங்களையும் நமக்கு தரக்கூடிய சக்தி படைத்தவள் வராகி அம்மன். வராகி அம்மன் பன்றி உருவத்தில் இருப்பதால் இவர் சாத்வீகமான அம்சம் உடையவரா? அல்லது உக்கிர தெய்வமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.


வராகி அம்மன் வேண்டுபவர்களுக்கு மனமிரங்கி உடனே அருள் புரிபவர். நம் வீட்டில் வராகி அம்மன் படத்தை அல்லது திருவுருவத்தை தனியாக வைத்து விசேஷமாக வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கப் பெறும். இந்த மண்ணில் இருக்கும் அத்தனை சுக போகங்களையும் அனுபவிக்கும் வரத்தை நல்கும் தாயாக இருக்கின்றாள்.


வராகி அம்மனுக்கு மிகவும் பிடித்த மரவள்ளி கிழங்கு நிவேதனமாக படைக்கலாம். அதனுடன் வெண்பூசணி காயை வேக வைத்து மசித்து சாதத்துடன் கலந்து பிரசாதமாக வைக்கலாம்.  வீட்டில் வராகி அம்மன் படம் வைத்து நைவேத்தியங்கள் படைத்து, வீடு முழுவதும் குங்குலியம் மற்றும் வெண் கடுகு போட்டு தூபம் காண்பியுங்கள். இவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கும் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, பொறாமை, துர்தேவதைகள், துஷ்ட சக்திகள் அனைத்தும் காணாமல் போய்விடும்....

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி