திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்

 


*திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்  என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.* 

அனைத்துப் பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சந்திரசூடு தலைமையிலான அம்ர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 

தற்போதைய கருக்கலைப்பு சட்டம் திருமண பந்ததின் அடிப்படையிலானது என்று குறிப்பிட்ட நீதிமன்றம் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றம் தேவை என்று தெரிவித்தது. திருமணமான பெண்களிடம் கூட அவர்களின்  விருப்பம் இல்லாமல்  உறவு கொண்டால் அது பாலியல் வன்முறைதான் என்றும் தெரிவித்துள்ளது. சட்டம் அனுமதிக்காததால் 67% பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. *தற்போதைய கருக்கலைப்பு சட்டம் பிரிவு 3(2) திருமணமாகாத பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது. எனவே அதனை ரத்துசெய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.*

ஏதேனும் இக்கட்டான சூழ்நிலையில் ஒரு பெண் தனக்கு கருவை சுமக்க முடியவில்லை என்று கருதும் போது, அவர் கருக்கலைப்பைத் தேர்வு செய்யலாம். அதற்கு சட்டம் தடையாக இருக்க முடியாது. எனவே, திருமணம் ஆனவர் ஆகாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பெண்களும்  கருக்கலைப்பை தேர்வு செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி