*வருமானம் தரும் ஒப்பனைக் கலை*
*வருமானம் தரும் ஒப்பனைக் கலை*
பெண்கள் தங்கள் நிதித்தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு கூடுதல் வருமானம் தரும் துறைகளில் அழகுக்கலையும் ஒன்று. இதில் மணப்பெண்களுக்கான மேக்கப், மாடலிங் துறைக்கான மேக்கப், விளம்பர படங்களுக்கான மேக்கப், போட்டோ ஷூட்டுக்கான மேக்கப், பேஷன் ஷோ மேக்கப் என்று பலவிதங்கள் உள்ளன.
முக ஓவியம், உடல் ஓவியம், பேஷன் மேக்கப், விழாக்களுக் கான ஒப்பனை என்று பலவிதமான மேக்கப் போடுவதில் சிறந்தவர் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞர் ரம்யா அழகேந்திரன். சிறந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சிங்கப் பெண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அழகுக்கலைத் துறையில் தனது அனுபவங்களையும், பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகளையும் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
''என்னுடைய அம்மா அழகுக்கலை நிபுணர். ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இருந்ததில்லை. படித்து முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்த பின்புதான் இந்த துறைக்கு வந்தேன். தற்போது செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். மேக்கப் ஸ்டூடியோவுடன், பயிற்சி நிறுவனமும் நிறுவி பெண்களுக்கு மேக்கப் கலை பற்றிக் கற்றுத் தருகிறேன்.
பெண்கள் தங்கள் நிதித்தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு கூடுதல் வருமானம் தரும் துறைகளில் அழகுக்கலையும் ஒன்று. இதில் மணப்பெண்களுக்கான மேக்கப், மாடலிங் துறைக்கான மேக்கப், விளம்பர படங்களுக்கான மேக்கப், போட்டோ ஷூட்டுக்கான மேக்கப், பேஷன் ஷோ மேக்கப் என்று பலவிதங்கள் உள்ளன.
முகத்தில் ஓவியங்கள் வரையும் மேக்கப் முறை தற்போது பிரபலமாக உள்ளது. இது விளம்பரப் படங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு தயாரிப்புப் பொருளை அறிமுகப்படுத்தும்போது, அதற்கு ஏற்றவாறு ஓவியம் வரைந்து மக்கள் கவனத்தை ஈர்க்கலாம். விலங்குகள், பூக்கள், மரங்கள், நிலா என பல உருவங்களையும் முகத்தில் கொண்டு வரலாம்.
போட்டோ ஷூட் செய்வதற்காக மேக்கப் போடும்போது, புகைப்படக் கலைஞர் எந்த விதத்தில் 'லைட்டிங்' வைக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டு மேக்கப் போட்டால் கூடுதல் அழகு வௌிப்படும்.
பல அழகுக்கலை நிபுணர்கள் மணப்பெண் அலங்காரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் பேஷன் மேக்கப், போட்டோ ஷூட், மாடலிங் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் கூடுதல் வருமானம் பெறலாம். ஆனால், அதற்கு உழைப்பும், பொறுமையும் அவசியம்.
மேக்கப் கலையை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் அடிப்படையில் மேக்கப் மீது ஆர்வம் இருக்க வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வு இந்தத் துறையில் அவசியமானது.
ஒரு நிகழ்ச்சியில் சிறப்பாக மேக்கப் போட்டீர்கள் என்றால், அதில் கலந்துகொள்ளும் அனைத்துப் பெண்களும் அதைப் பார்ப்பார்கள். அவர்களில் பலரும் உங்கள் வாடிக்கையாளர் ஆவதற்கான வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு உங்கள் தொழில் நேர்த்தி பிடித்துவிட்டால் அவர்களது உறவினர், நண்பர்கள் என்று பலருக்கும் பரிந்துரை செய்வார்கள்.
ஓவியம் வரைவது, சிற்பம் செதுக்குவது போல் மேக்கப்பிலும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய பெண்கள் எதை விரும்புகிறார்கள். டிரெண்டிங் என்ன? ஆகியவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆர்வமுள்ள பெண்கள் இந்தக் கலையைக் கற்று, சிறந்த தொழில் முனைவோராக மாறலாம்'' என்கிறார் ரம்யா அழகேந்திரன்.
Comments