ராஜாயி, “டி.ஆர்.ராஜகுமாரி
கச்சதேவயானியில் கதாநாயகியாக நடிக்க டி.ஆர்.ராஜகுமாரி
தேர்ந்தெடுக்கப்பட்ட விதமே சுவாரஸ்யமானது.
அந்தக்காலத்தில் தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகியாக
இருந்த திருமதி டி.பி.தனலட்சுமியை பேசித்தீர்மானிக்க
தனலட்சுமியின் இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த ராஜாயி என்கிற அவரது உறவுப்பெண் அங்கே அவருக்கு
காப்பித் தட்டை ஏந்தி வந்திருக்கிறார்….
ராஜாயியைப் பார்த்தவுடன்
கே.சுப்ரமணியனின் எண்ணமே மாறி விட்டது. ராஜாயி தான் தனது தேவயானி என்று உடனடியாகத் தீர்மானித்து விட்டார். ராஜாயி கருப்பான தோற்றம் உடையவர். இருந்தாலும் களையான முகம். கேமிரா கண்களில் அந்த உருவம் இன்னும் அழகாகவும்,
கவர்ச்சியாகவும் தோன்றும் என்பது கே.சுப்ரமணியனின் முடிவு. மேலும், ராஜகுமாரி நன்றாக பாடக்கூடியவர் வேறு. (கச்சதேவயானியில் மொத்தம் -25 பாடல்கள்…!!! )
அவ்வளவு தான்…தமிழகத் திரையுலகிற்கு முதல் கனவுக்கன்னி
கிடைத்து விட்டார்…
ராஜாயி, “டி.ஆர்.ராஜகுமாரி” என்கிற பெயருடன்
கச்ச தேவயானி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம்
செய்யப்பட்டார். டைரக்டர் கே.சுப்ரமணியனின் சூப்பர் ஹிட்
தமிழ்ப்படமாக வெளியாகியது “கச்சதேவயானி”…
அழகிய, கவர்ச்சிகரமான தேவயானியைப் பார்க்க -தியேட்டர்களில்
மக்கள் வெள்ளம் அலைமோதியது.
- காவிரி மைந்தன்
நன்றி: விமர்சனம்.காம்
Comments