பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் கார்.. வந்தாச்சு டாடா டியாகோ ஈவி!*
*பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் கார்.. வந்தாச்சு டாடா டியாகோ ஈவி!*
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக டியாகோ ஈவி (Tiago EV) எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், பட்ஜெட் விலையில் டியாகோ ஈவி எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
டியாகோ ஈவி கார் விலை 8.49 லட்சம் ரூபாய் (ex-showroom) முதல் தொடங்குகிறது. டியாகோ ஈவி கார் XE, XT, XZ+, XZ+ Tech LUX என நான்கு வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது. டியாகோ ஈவி வெறும் 5.7 நொடிகளில் 60 மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என டாடா மோட்டார்ஸ் கூறுகிறது.
இரண்டு வகையான பேட்டரிகளுடன் டியாகோ ஈவி வந்துள்ளது. 19.2 kWh பேட்டரியில் ஒரே சார்ஜிங்கில் 250 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். 24 kWh பேட்டரியில் 315 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என டாடா தெரிவித்துள்ளது.
டியாகோ ஈவி காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் (fast charging) வசதியும் உள்ளது. DC fast charger பயன்படுத்தி டியாகோ ஈவி கார் பேட்டரியை 57 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்துவிடலாம் என டாடா கூறுகிறது. அக்டோபர் 10ஆம் தேதி முதல் கார் புக்கிங் தொடங்குகிறது. 2023 ஜனவரி முதல் கார் டெலிவரி தொடங்கும்.
டாடா டியாகோ ஈவி ex-showroom விலைப்பட்டியல்:
19.2 kWh
XE - 8.49 லட்சம் ரூபாய்
XT - 9.09 லட்சம் ரூபாய்
24 kWh
XT - 9.99 லட்சம் ரூபாய்
XZ+ - 10.79 லட்சம் ரூபாய்
XZ+ Tech LUX - 11.29 லட்சம் ரூபாய்
24 kWh - 7.2kW AC சார்ஜர் உடன்
XZ+ - 11.29 லட்சம் ரூபாய்
XZ+ Tech LUX - 11.79 லட்சம் ரூபாய்.
Comments