அம்பை' என்ற அவரது புனைபெயரே ஆண் ஆதிக்க உலகுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்

 


வீட்டின் மூலையில் ஒரு சமயலறை' ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் படித்தது. எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு அவர்கள் அந்நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். உலகத்தை ஒரு ஆண் பார்ப்பதற்கும் ஒரு பெண் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்? என்று சிந்திக்க வைத்த அற்புதமான சிறுகதைத் தொகுப்பு. உலகத் தரத்திலான எழுத்து.

'அம்பை' என்ற அவரது புனைபெயரே ஆண் ஆதிக்க உலகுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மகாபாரதப் பாத்திரத்தின் பெயர்தான். அந்த மகாபாரத அம்பையின் நெஞ்சக் கனலை இவரது எழுத்துக்களில் காணமுடியும்.
பின் 'வற்றும் ஏரியில் மீன்கள்' என்ற தொகுதி படித்திருக்கிறேன். அதில் ஒரு கதையில் வரும் சந்தால் மொழிக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. தனக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும் என்று தன் தந்தையிடம் ஒரு மகள் பட்டியல் போடுவாள். பெண் மனதை அவ்வளவு அழகாகச் சொல்லும். அதன் பிறகு நிறைய எழுதி இருக்கிறார்.
- பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி