பார்த்திபன்.


 தாவணிக் கனவுகள்' படத்தில்தான் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சேர்ந்திருந்தார் பார்த்திபன். நடிப்புதான் அவரது லட்சியம். அது அமையாமல் உதவி இயக்குநரான தாவணிக் கனவுகளில் வேலை செய்தார். அதில் வரும் போஸ்ட்மேன் வேடத்தில் நடிக்க பார்த்திபனுக்கு வாய்ப்பளித்தார் பாக்யராஜ்.

பார்த்திபனின் தந்தை ஒரு போஸ்ட்மேன். அதனால், அந்த வேடத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று விரும்பினார் பார்த்திபன். தனது உதவி இயக்குநரின் விருப்பம் அறிந்து அந்த வேடத்தை பார்த்திபனுக்கு தந்தார் பாக்யராஜ்.
தாவணிக் கனவுகள் படப்பிடிப்பில் இருந்த நேரம், விதி திரைப்படம் வெற்றிகரமாக தமிழகமெங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அதில் போஸ்ட்மேனாக ஒரேயொரு காட்சியில் பாக்யராஜ் நடித்திருந்தார். தாவணிக் கனவுகள் படத்தில் போஸ்ட்மேன் வேடம் என்றதும், தனது குரு பாக்யராஜ் விதி படத்தில் போட்டு நடித்த போஸ்ட்மேன் காஸ்ட்யூமை தேடி கண்டுபிடித்து வாங்கி, தாவணிக் கனவுகள் படத்தில் அதைப் போட்டு நடித்தார் பார்த்திபன்.
பாரதிராஜா போன் செய்தால், பாக்யராஜ் உட்கார்ந்திருந்தால் எழுந்து நின்றுதான் பதிலளிப்பார் என்பார்கள். அந்தளவு பாக்யராஜுக்கு குருபக்தி. அதில் குறைவில்லாத சிஷ்யர் பாக்யராஜுக்கும் கிடைத்தார். அவர்தான் பார்த்திபன்.
நன்றி: நியூஸ் 18 தமிழ்
May be an image of 2 people and people standing
Elango Kumanan, Baskar M and 27 others
2 comments
Like
Comment

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி