கவிதையை மொழிபெயர்ப்பது கூடு விட்டுக் கூடு பாய்வது.


 #உலகமொழிபெயர்ப்புநாள்

*

கவிஞர் சச்சிதானந்தன் அவர்களின்

மலையாளக் கவிதைகளை கவிஞர் சிற்பி அவர்கள் மொழிபெயர்த்து 'ஆலிலையும் நெற்கதிரும்' எனும் தலைப்பில் சாகித்திய அகாதமி பதிப்பகம்  ஒரு தொகுப்பு வெளியிட்டுள்ளது. 


அதில் மொழிபெயர்ப்பு குறித்து ஒரு கவிதை . உலக மொழிபெயர்ப்பு நாளில் அக்கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

*

கவிதையை மொழிபெயர்ப்பது 

கூடு விட்டுக் கூடு பாய்வது. 


மீன் தண்ணீரில் நீந்துவது போல் மொழிபெயர்ப்பாளன் மனங்களுக்குள் நீந்துகிறான்.


ஒவ்வொரு சொல்லின் கரையோரத்துப் 

பொடி மண்ணிலும் குனிந்திருக்கிறான் .


ஒவ்வொரு பாசியின் நிறத்தையும் ஆராய்கிறான்.


ஒவ்வொரு சங்கையும் ஊதிப் பார்க்கிறான்.


கவிதை மொழிபெயர்ப்பு விக்கிரமாதித்தன் கதையில் 

தலையை மாற்றி வைக்கும் திகைப்பாகும்


மொழிபெயர்ப்பாளன் தன் உடலில் 

இன்னொரு கவிஞனின் தலையை 

பொருத்திப் நிறுத்துகிறான்."

     - சச்சிதானந்தன் 

மொழிபெயர்ப்பு எவ்வளவு நுட்பமானது என்பதை இதைவிட அழகாகச் சொல்லமுடியுமா? 

*

பிருந்தா சாரதி 


*

(புகைப்படம்: கவிஞர் சச்சிதானந்தன் அவர்களின் ' ஆலிலையும் நெற்கதிரும் '

நூலில் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டு என் 'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்' , 'எண்ணும் எழுத்தும்' ஆகிய கவிதை நூல்களை அவருக்கு வழங்கியபோது)

*

#worldtranslationday

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி