சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம்
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் தெய்வத்திரு டி.ஆர். சுந்தர முதலியார் சாதனைகளின் பட்டியல்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தான் தமிழ் திரைப்பட நிறுவனங்களுள் முதன் முதலில் 1960 களிலேயே 100 படங்களுக்கு மேல் எடுத்த நிறுவனம் ஆகும்.
இவர் தான் மலையாள மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமான (பாலன் 1938) என்ற படத்தை உருவாக்கியவர்.
முதல் சிங்களப் படத்தை எடுத்தது இவரே
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்சும் அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலத் திரைப்படத்தை - தி ஜங்கிள் என்ற பெயரில் தயாரித்தனர்.
1940 இல் பி. யூ. சின்னப்பா நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ் இரட்டை வேடம் திரைப்படமான உத்தமப் புத்திரன் என்ற படத்தை இயக்கி தயாரித்த வரும் இவரே.
1942ஆம் ஆண்டில் பி. யூ. சின்னப்பா மற்றும் டி.ஆர் ராஜகுமாரி நடித்து வெளியான "மனோன்மணி" என்ற திரைப்படம் தான் அக்காலத்தில் தமிழில் உருவான மிகுந்த பொருட்செலவில் தயாரான முதல் தமிழ்த் திரைப்படமாகும். படத்தின் சண்டைக் காட்சியில் 3 ஆயிரம் துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டன.
தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படம் 1956ஆம் ஆண்டில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்த வரும் டி. ஆர். சுந்தரம் முதலியார் ஆகும். இதை மலையாளத்தில் ”கண்டம் வெச்ச கொட்டு” என்ற பெயரிலும் தயாரித்தார்.
டி. ஆர். சுந்தரம் 1961ஆம் ஆண்டில் கண்டம் வெச்ச கொட்டு என்ற மலையாளத் திரைப்படத்தை தயாரித்தார் அம்மொழியில் எடுக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம் இதுவே ஆகும்.
புகழ்பெற்ற நகைச்சுவை நடிகை மனோரமா கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1963ஆம் ஆண்டில் வெளியான கொஞ்சும் குமரி டி.ஆர். சுந்தரத்தின் 97ஆவது திரைப்படமாக அமைந்தது.
1938 ஆம் ஆண்டில் "மாயா மாயவன்" என்ற படத்தை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது. இதில், டி.கே.சம்பங்கி என்ற பிரபல நாடக நடிகர் கதாநாயகனாக நடித்தார். நொட்டானி என்பவர் இப்படத்தை இயக்கினார்.
மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் இந்திய திரைப்படமான சௌ சௌ என்ற படத்தை தயாரித்து வரும் இவரே.
இவர் தயாரித்த பொன்முடி என்ற பட காமெராமேனுக்கு பிரெஞ்சு அரசு விருதளித்துப் பாராட்டியது.
இந்தியாவின் ஐந்து முன்னாள் முதலமைச்சர்கள் இவர் நிறுவனத்தில் நடிகர்களாக வேலை பார்த்துள்ளார்கள் .
தனது திரைப்படங்களில் தரமான தயாரிப்பு அமைய அடிக்கடி வெளியிலிருந்து இயக்குனர்களை, எல்லிசு ஆர். டங்கன், மணி லால் டண்டன், பொம்மன் டி.இரானி போன்றவர்களை, பயன்படுத்தியது இவரே ஆவார்.
கவிஞர் கண்ணதாசன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்கள் தொடக்க காலத்தில் டி. ஆர். சுந்தரம் முதலியார் நிறுவனத்தில் தான் தங்கி பாடல்கள் திரைக் கதைகள் எழுதிவந்தனர்.
திருச்சி லோகநாதன் சீர்காழி கோவிந்தராஜன் டி எம் சௌந்தரராஜன் போன்ற பாடகர்கள் இவர் தயாரித்த படங்களில் பாடிய பின்பு பிரபலம் அடைந்தனர்.
எம் என் நம்பியார் பத்து வேடங்களில் நடித்த திகம்பர சாமியார் என்ற படத்தை இயக்கி மற்றும் தயாரித்தவர் இவரே.
எம்.ஜி.ஆர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முதல் முதலில் வெற்றி படத்தை கொடுத்த வரும் இவர்.
ஆந்திர முன்னாள் முதல்வர் என் டி ராமாராவ் இவர் தயாரித்த படத்தில் நடித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இவர் தயாரித்த பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜானகி எம்.ஜி.ஆர் இவர் தயாரித்த பல படங்களில் நடித்துள்ளார்.
டி.ஆர். சுந்தர தைரியத்தை எந்த ஒரு படத்திற்கும் வெளியாட்களிடம் இருந்து கடன் வாங்கியது இல்லை. பரம்பரை பணக்காரரான இவர் தயாரித்த அனைத்து படமும் இவர் சொந்தப் பணத்தில் எடுக்கப்பட்டவையாகும்.
'உலக அழகி கிளியோபட்ரா' என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் ஒரு நடிகை கழுதைப்பாலில் குளித்ததை போல், டி. ஆர். சுந்தரம் அந்த காட்சியை தமிழ் திரைப்படத்தில் எடுப்பதற்காக 1000 கழுதைகளை மாடர்ன் தியேட்டர்ஸுக்கு கொண்டு வந்து, பால் கரந்து அதில் ஒருவரை குளிக்க வைத்து படம் எடுத்திருக்கிறார். அதே போல யானை, குதிரை போன்ற உண்மை விலங்குகளை வைத்து படம் எடுத்தார்.
சுந்தரம் தயாரித்த நாம தேவர் என்ற படம் தமிழில் வெளியான 100வது படம் என்ற பெருமையைப் பெற்றது.
இந்தியாவில் வெளிவந்த முதல் அறிவியல் புனைகதை (Science fiction) தொடர்புடைய படமான Trip To Moon என்ற படத்தை இயக்கியவரும் இவரே...
Comments