வில்லிசை கலைஞரின் நினைவலைகள்

 


பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள் கலைமாமணி பாரதி திருமகன்

என் தந்தை என்ன சொன்னாலும், நகைச்சுவை நடிகர் நாகேஷ் அண்ணா ஒரு பேப்பர் எடுத்து, அந்நிகழ்ச்சியை ஒன்றுவிடாமல் குறிப்பெடுத்து கொள்வார். இதேபோல், ஒருமுறை - என் தந்தை, ஒரு சம்பவத்தின் பெருமையை எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார்.
நாகேஷ் அண்ணா குறிப்பெடுப்பதை நிறுத்திவிட்டு, தன் வீட்டில் வளர்க்கப்படும் பெரிய பெரிய நாய்களின் பெருமையை அதிகமாகப் பாராட்டிப் பேசினார். மேலும் மனிதர்களில் சிலரைப் பற்றி நாகேஷ் பேசும்போது, ‘அந்தளவுக்கு நன்றி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கள் வீட்டு நாய்கள், அவர்களை குரைத்து குரைத்து விரட்டிவிட்டது. நாய்களுக்குக்கூட, சில நன்றி இல்லாத மனிதர்கள்மீது எக்கச்சக்கமான கோபம் இருக்கிறது..!’ என்று தனக்கே உரிய கிண்டல் பாணியில், நாகேஷ் அண்ணா மிகையாகச் சொன்னாராம்..!
இதை என் தந்தை ரசிக்கவில்லை என்பதை அறியாமல்... ‘‘அண்ணே… இதுபற்றி உங்க கருத்து என்ன..?’’ என நாகேஷ் அண்ணா இயல்பாக கேட்டிருக்கிறார்.
என் தந்தை நிதானமான குரலில், ‘‘நாகேஷ்… நீங்க சொன்ன மாதிரி, நாய்கள் நல்லா பாதுகாக்கும், அன்பா இருக்கும்… நன்றியா இருக்கும், கொஞ்சும், விளையாடும்… என்றாலும், மனிதர்கள்… மனிதர்கள்தான்..! ஏன் தெரியுமா..?
நம்ம காலம் முடிஞ்சு போச்சுன்னு வெச்சுக்குங்க… நம்மளை நாலு மனுஷங்கதானே தூக்கிக்கிட்டுப் போகணும். அதுக்குப் பதிலா… நாம செல்லமா வளர்க்கிற நாலு நாய்கள், நம்ம உடையை புடிச்சுக்கிட்டு, தரதரன்னு இழுத்துட்டுப் போனா… பார்க்க நல்லாயிருக்காது நாகேஷ்..! நாய்கள்… நாய்கள்தான்..! மனிதர்கள், மனிதர்கள்தான்… புரிஞ்சுக்கணும்..!’’ என்று என் தந்தை சற்று விவேகத்துடன் சொன்னாராம்.
‘‘சுப்பண்ணே… ரொம்ப
அருமையான
கருத்து..! இருங்க, நீங்க சொன்னதை நான் பேப்பரில் எழுதிக்கறேன்… ஏதாவது ஒரு மேடையிலே, சுப்பண்ணே பேரைச் சொல்லிட்டு, நான் கைத்தட்டல் (Claps) வாங்கிக்கிறேன்..!’’ என கவிஞர் கூறிய கருத்துகளை, அப்படியே நாகேஷ் பேப்பரில் எழுதிக் கொண்டாராம்..!
இதுபோன்ற ஆத்மார்த்தமான சம்பாஷணைகள் இருவருக்கும் இடையே ஏராளமாக நடந்திருக்கின்றன. இதேபோல் என் தந்தைக்கும் நாகேஷ் அண்ணாவுக்கும் இடையே கடைசிவரை ஆத்மார்த்தமான பேச்சு, நட்பு நீடித்து வந்திருக்கிறது..!
நன்றி: விகடகவி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி