ரஜினியும், ஷாருக் கான் சென்னையில் நேற்று சந்தித்து...

 


ரஜினியும், ஷாருக் கான் சென்னையில் நேற்று சந்தித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..

நடிகர் ரஜினிகாந்த், இப்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். `டாக்டர்', `பீஸ்ட்' படங்களை கொடுத்த நெல்சன் இயக்கி வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகிறார்கள். சென்னை ராயப்பேட்டையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னையில் பல பகுதியில் நடந்து வருகிறது. ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. அங்கே பிரமாண்டமான செட் ஒன்றை அமைத்துள்ளனர்.
இங்குதான் ஷாருக் கான் - அட்லி கூட்டணியின் `ஜவான்' படப்பிடிப்பு இரண்டு வாரங்களாக போய்க்கொண்டிருக்கிறது. ஆதித்யா ராமில் மிகப்பெரிய வீடு ஒன்றை செட் போட்டுள்ளனர். அதில் தான் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா எனப் பலரும் நடித்து வருகிறார்கள். இன்னும் சில வாரங்கள் இங்கே படப்பிடிப்பு பரபரக்கும் என்கிறார்கள்.
சரிவிஷயத்திற்கு வருவோம். 'ஜெயிலர்' படப்பிடிப்பும், 'ஜவான்' படப்பிடிப்பும் அருகருக்கே நடந்ததில், ரஜினி - ஷாருக் கானின் சந்திப்பு நடந்திருக்கிறது. நேற்று அங்கே ரஜினியின் படப்பிடிப்பு நடக்கிறது எனக் கேள்விப்பட்ட ஷாருக், உடனே `ஜெயிலர்' செட்டுக்குள் சென்று ரஜினியைச் சந்தித்திருக்கிறார். 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அட்லியும், நெல்சனும் உடனிருந்திருக்கிறார்கள்.
இதற்கு முன் இவர்கள் இருவரும் நயன்தாராவின் திருமணத்தில் சந்தித்துக் கொண்டனர். அங்கு பெரிய அளவில் பேசிக் கொள்ள முடியவில்லை.
'ஜெயிலர்', 'ஜவான்' படப்பிடிப்புகள் ஆதித்யாராமில் தொடர்ந்து நடக்கிறது என்பதால் இவர்கள் சில நாட்களாவது அடிக்கடி சந்தித்துக் கொள்வது சகஜமாக இருக்கும் என்கிறார்கள் யூனிட்டில் உள்ளவர்கள்.
நன்றி: சினிமா விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி