பரலி சு. நெல்லையப்பர் பிறந்த நாள்
பரலி சு. நெல்லையப்பர் பிறந்த நாள் (செப்டம்பர் 18, 1889)
இன்று தேசியகவி பாரதியார் கவிதைகளையும், கட்டுரைகளையும் படித்துப் பயனடைகிறோம் என்றால் அவ் வாய்வுகளைத் தொடங்கி வைத்த பரலி சு. நெல்லையப்பர் ஒரு முக்கிய காரணர். பாரதியின் வரலாறு
முதலில் எழுதியவர் பரலி சு. நெல்லையப்பபிள்ளை ஆவார்.
ஆங்கிலேயர்களின் வீடுகளில் வேலை பார்த்த துணி வெளுப்பாளர்கள், வேலையாட்கள், சமையற்காரர்கள் போன்றவர்களை திரட்டி, வேலை நிறுத்த போராட்டம் நடத்திய வ.உ.சி.க்கு, நெல்லையப்பர் பெரிதும் உதவியாக இருந்தார்.
விபின் சந்திரபாலை, ஆங்கிலேயர்கள் விடுதலை செய்தனர். அந்த நிகழ்வை கொண்டாடுவதற்காக, காவல்துறையினரின் தடையை மீறி, வ.உ.சி. தூத்துக்குடியில் சுப்பிரமணி சிவாவோடு இணைந்து, மார்ச் 9 ஆம் தேதி, ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அந்த ஊர்வலத்தில், நெல்லையப்பரும் கலந்துக் கொண்டார்.
கப்பல் கம்பெனி நடத்தியது போன்ற பல்வேறு போராட்டங்களுக்கு, ஆங்கில அரசு, வ.உ.சி. மற்றும் சிவா ஆகிய இருவரையும், மார்ச் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து கூட்டம் ஒன்றை நடத்துவதற்காக, துண்டு சீட்டு அச்சிட்டு வெளியிட்டார். இதற்காக இவரை, ஆங்கில அரசு கைது செய்து, ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தது.
1930ல் மறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். இதனால், இவறை ஆறு திங்கள் சிறை தண்டனை பெற்றார்.
1932ல் காந்தியடிகளின் கட்டளையை ஏற்று, சென்னை சிந்தாதரிப்பேட்டையில், கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிக்கடை முன்பு ஆரப்பாட்டம் போன்ற போராட்டத்தை, தலைமையேற்று நடத்தினார்.
1941ல், தனிநபர் சத்தியாகிரகம் என்னும் தனியாள் அறப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், பெல்லாரி சிறையில் அடைக்கப் பட்டார்.
சிறையில் இருந்த வ.உ.சி. மற்றும் சிவாவை விடுதலை செய்ய, பல வழிகளில் போராடினார்.
வ.உசி.யின் கட்டளைக்கேற்ப, நெல்லையப்பர் கோயம்பத்தூர் சென்று, வழக்கறிஞர் சி.கே. சுப்பிரமணி முதலியார் உதவியோடு, கோவை பேரூர் சாலையில், ஆசிரமம் ஒன்றை அமைத்து தங்கினார். அவ்வப்பொழுது சிறைக்குச் சென்று, வ.உ.சி.யை சந்தித்து, அவரின் கட்டளைகளை, ஆசிரமத்தில் இருந்தவாறே நிறைவேற்றினார்.
வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின், சென்னை சிந்தாதரிப்பேட்டையில், குடியேறினார். நெல்லையப்பர், வ.உ.சியை சந்திக்க வந்து, அவரும் சென்னையிலே உள்ள குரோம்பேட்டையில், இறுதி காலம் வரை தங்கினார்.
தான் வாழந்த பகுதிக்கு, “பாரதிபுரம்” எனப் பெயர் சூட்டினார்
Comments