வீட்டில், பாபாவின் வழிபாடு எந்த முறைப்படி செய்யப்பட வேண்டும்
வீட்டில், பாபாவின் வழிபாடு எந்த முறைப்படி செய்யப்பட வேண்டும் ?
பூஜையறையில் என்னென்ன பொருட்களை மற்றும் படங்களை வைக்க வேண்டும்? வைக்கக் கூடாது? என்பதற்கு நிறைய ஆகம விதிமுறைகள் உள்ளன. அது போல் இறந்தவர்களின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது! என்பதும் சாஸ்திரம். இதில் பலருக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால், மனித உருவில் வாழ்ந்த நாம் தெய்வமாக போற்றும் சில மகான்கள் படங்களை வீட்டில் வைத்து கொள்ளலாமா? வைத்துக் கொள்ளக் கூடாதா? பூஜையறையில் வைத்துக் கொள்ளலாமா? வைத்துக் கொள்ளக் கூடாதா? என்பது போன்ற சந்தேகங்கள் நிறைய பேருக்கு இருக்கின்றன.
ஒரு கோயிலில் பாபாவை வழிபடுவதற்கும் வீட்டில் வழிபடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. வீட்டில் வழிபடப்படும் பாபாவின் விக்கிரகத்திற்கு பொதுவாக ' பிராண பிரதிஷ்டை ' செய்வதில்லை. அவரது உருவப் படங்கள்தான் பொதுவாக வழிபடப்படுகின்றன. வீட்டில், பாபாவை வழிபடும் முறையை எளிதாக வைத்துக் கொள்வது அவசியம்.
தேவையான பக்தியை உள்ளுக்குள் உருவாக்காவிட்டால், பெரும்பாலான சடங்குகளும், சாங்கியங்களும் செயற்கையானதும் பயனற்றதும் ஆகும்.
சத்குருவின்மீது அசையாத நம்பிக்கையுடனும் உணர்வுபூர்வமாகவும் ஒரே ஒரு மலரை அர்ப்பணித்தால் கூட போதுமானது. நாம் வீட்டை விட்டு ஏதோ காரணமாக வெகு தூரத்தில் இருந்தாலும், ஓர் இடத்தில் அமர்ந்தவண்ணம் வீட்டில் செய்யும் வழிபாட்டைப் போலவே மானசீகமாக அப்பொழுதும் பாபா வழிபாட்டை நாம் செய்யலாம். அதேசமயம் வீட்டில் இவ்வழிபாட்டை வேறு யாரையாவது செய்யச் சொல்லலாம்.
வெவ்வேறு மதங்கள், சாதிகள், மத நம்பிக்கைகள், சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் பாபா.
சத்குருவினுள் எல்லா தெய்வங்களும் அடங்கியுள்ளன என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே மற்ற தெய்வங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை மட்டுமே தெய்வமாக வணங்குவதில் தவறேதுமில்லை.
அல்லது மற்ற தெய்வங்களை வணங்குகின்ற முறையிலேயே பாபாவையும் வணங்குவதிலும் தவறு ஏதுமில்லை. சீக்கிய மதத்தினர் தங்கள் குருக்களுக்காக மகிழ்ச்சியுடன் உயிர்த்தியாகம் செய்தனர். காரணம் சத்குருவானவர் நிரந்தரமானவர் என்றும் தம்மோடு எப்போதும் இருப்பவர் என்றும் அவர்கள் உளமார நம்புகின்றனர். எனவே பாபாவின்பால் அசைக்கமுடியாத தீவிர நம்பிக்கை கொண்டிருப்பது என்பதே முற்றிலும் தேவையான ஒன்று.
பொதுவாகவே வீட்டில் வைக்க வேண்டிய முக்கிய படங்களில் குலதெய்வ படம், நட்சத்திரத்திற்குரிய அதிதேவதை, ராசிக்குரிய சித்தர், இஷ்ட தெய்வங்கள் போன்றவை இடம் பெற்றிருப்பது அவசியமாகும். உங்கள் ஜாதகப்படி நீங்கள் வணங்க வேண்டிய தெய்வங்களை முறையாக வணங்கி வந்தால் வாழ்க்கையில் உங்களை யாரும் வெல்ல முடியாத அளவிற்கு உயரத்தை நீங்கள் அடைய முடியும்....
Comments