பரிகாரத் தலங்கள் பதினாறு*

 


பரிகாரத் தலங்கள் பதினாறு*


* திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்றான திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமிக்கு அவலும், வெண்ணெயும் நிவேதித்தால் மழலை வரம் கிட்டும்.


* அரியக்குடி தென் திருவேங்கடமுடையானுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால், விரும்பிய வேலை கிடைக்கும்.


* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெயை சரும நோய் உள்ளவர்கள் தடவி வர அந்த நோய் நீங்குகிறது.


* கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அருளும் ஐராவதேஸ்வரருக்கு மிளகு அரைத்துத் தடவி வெந்நீரால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க, காய்ச்சல் விலகிவிடுகிறது.


* சிறுநீரக நோய்கள் நீங்க லால்குடிக்கு அருகே உள்ள ஊட்டத்தூரில் அருளும் பஞ்சநதக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப்பெருமானை தரிசித்து வெட்டிவேர் மாலை சாத்தி தினமும் வெட்டிவேர் போட்ட நீரை அருந்தலாம்.


* திருக்காரவாசல் கண்ணாயிரமுடையாருக்கு மூலிகைத் தைல அபிஷேகம் செய்து, அத்திப்பழத்தை நிவேதித்து பிரசாதமாகப்பெற்று 48 நாட்கள் தைலத்தை தலையில் தேய்த்தும் தேனில் ஊறிய அத்திப்பழத்தை உண்டும் வந்தால் கண்நோய்கள் தீரும்.


* திருச்சி கன்டோன்ட்மென்ட் லாசன்ஸ் சாலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் உள்ள நாகதேவதைகளுக்கு பூஜை செய்து பிரசாதமாகத் தரப்படும் பால்பாயசத்தை உண்டு, மஞ்சளை தினமும் அணிந்து கொள்ள, திருமணத் தடை, புத்ரபாக்கியத் தடை நீங்குகின்றன.


* செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள சிராத்த சம்ரட்சணப்பெருமாளை தொடர்ந்து அமாவாசையில் தரிசித்தால் பித்ரு தோஷங்களும், பித்ரு சாபங்களும் விலகும்.


* திருச்சி துடையூர் கடம்பவன விஷமங்களேஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள வாதக்கல் முனி சமாதியை வழிபட்டால் அனைத்துவகை வாத நோய்களும் நீங்கும்.


* திருக்கோலக்காவில் அருளும் தொனிப்ரதாம்பாளுக்கு வாக்வாதினி அர்ச்சனை செய்து அம்பிகைக்கு அபிஷேகித்த தேனை உண்ணச்செய்தால் சரியாகப் பேச வராத குழந்தைகள் நன்கு பேசும்.


* சென்னை மயிலாப்பூர் கோலவிழியம்மன் ஆலயம் அருகில் உள்ள வாலீஸ்வரரை வணங்கினால் எதிரிகள் தொல்லை விலகும்.


* திருவிற்குடி கங்களாஞ்சேரி வீரட்டேஸ்வரரையும் அம்பிகையையும் தரிசித்து ஆலயத்திலிருந்து கல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.


* லால்குடி திருமங்கலம் சாமவேதீஸ்வரர் ஆலய சனிபகவானை தரிசித்து அர்ச்சனை செய்தால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.


* திருநீலக்குடி மனோக்ஞநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து நீலநிறபட்டுத்துணியையும், எள்ளையும் தானமளித்தால் மரணபயம் விலகும்.


* திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் ப்ருஹன்மாதவனுக்கு அர்ச்சனை செய்து கனவில் பாம்பு வந்து தொல்லை தராது. இது ஒரு சர்ப்பதோஷ பரிகாரத் தலம்.


* வைத்தீஸ்வரன் கோயில் வைத்யநாதரையும், தையல்நாயகியையும் வழிபட்டு ஆட்டு வாகனத்தில் ஆரோகணித்திருக்கும் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்ய, செவ்வாய் தோஷம் நீங்கும்.

...

[13/09, 10:22 pm] +91 99407 62319: *பிரதட்சணம் (வலம்) வருவதன் உட்பொரு

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி