தமிழகத்தில் 28 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் 15 % வரை கட்டணம் உயர்வு.

 


தமிழகத்தில் 28 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் 15 % வரை கட்டணம் உயர்வு.


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. 


அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. 


இதனை தொடர்ந்து இன்று (01-09-2022) முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 


அந்த வகையில், நள்ளிரவு முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 28 சுங்கச்சாவடிகள் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தபட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி