திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ‘தேவுடு’வை தரிசிக்க 24 மணி நேரம் தவம்:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ‘தேவுடு’வை தரிசிக்க 24 மணி நேரம் தவம்: ஒரே நாளில் ரூ.4.22 கோடி காணிக்கை*
திருமலை,: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். சனிக்கிழமையான நேற்று முன்தினம் இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் 80,741 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
41,494 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.22 கோடியை காணிக்கை செலுத்தி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பி நந்தகம் விருந்தினர் மாளிகை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
Comments