உலகத் தற்கொலை தடுப்பு நாள்: செப்டம்பர் 10
உலகத் தற்கொலை தடுப்பு நாள்: செப்டம்பர் 10
நாளிதழ்களில் தற்கொலைச் செய்திகள் இல்லாத நாட்களே இல்லை என்னும் அளவுக்குத் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.
தற்கொலையைத் தடுக்கும்விதமாக 2003 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10-ம் தேதி உலகத் தற்கொலைத் தடுப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
அடிசினல் சேதி : எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்லாம் பதிவிட்டு மற்ற இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வந்த தூரிகை கபிலன் நேற்று தற்கொலை செய்து கொண்டார்
Comments