Posts

Showing posts from September, 2022

*ஏன் புரட்டாசியில் நவராத்திரி?*

Image
 *ஏன் புரட்டாசியில் நவராத்திரி?* நன்றி குங்குமம் ஆன்மிகம் இதில் ஜோதிட ரீதியான முக்கியமான குறிப்பும் இருக்கிறது. சூரியன் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். சூரியன் வித்தைக்கு நாயகன். சூரியனிடமிருந்துதான் சகல கலைகளையும் அனுமன்கற்றார். சூரியன் சஞ்சரிக்கும் கன்னி ராசிக்கு உரிய கோள் புதன். புதன் கலைகளுக்கு அதிபதி. வித்தைக்கு அதிபதி. புத்திக்கு அதிபதி. எனவே கலைகளுக்கு அதிபதியான புதனுடைய ராசியில் சூரியன் பிரவேசிக்கும் கன்னி மாதத்தை நவராத்திரி உற்சவம் கொண்டாடத் தேர்ந்தெடுத்தார்கள். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்பியாசம்’ என்னும் முதல்படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு). வளர்பிறை தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், சந்திரன் ஒவ்வொரு கலையாக வளர்வதுபோல, எல்லா கலைகளும் பூரணமாக வளர்ந்து பெருவெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, வளர்பிறையைத் தேர்ந்தெடுத்தார்க...

கவிதையை மொழிபெயர்ப்பது கூடு விட்டுக் கூடு பாய்வது.

Image
 #உலகமொழிபெயர்ப்புநாள் * கவிஞர் சச்சிதானந்தன் அவர்களின் மலையாளக் கவிதைகளை கவிஞர் சிற்பி அவர்கள் மொழிபெயர்த்து 'ஆலிலையும் நெற்கதிரும்' எனும் தலைப்பில் சாகித்திய அகாதமி பதிப்பகம்  ஒரு தொகுப்பு வெளியிட்டுள்ளது.  அதில் மொழிபெயர்ப்பு குறித்து ஒரு கவிதை . உலக மொழிபெயர்ப்பு நாளில் அக்கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். * கவிதையை மொழிபெயர்ப்பது  கூடு விட்டுக் கூடு பாய்வது.  மீன் தண்ணீரில் நீந்துவது போல் மொழிபெயர்ப்பாளன் மனங்களுக்குள் நீந்துகிறான். ஒவ்வொரு சொல்லின் கரையோரத்துப்  பொடி மண்ணிலும் குனிந்திருக்கிறான் . ஒவ்வொரு பாசியின் நிறத்தையும் ஆராய்கிறான். ஒவ்வொரு சங்கையும் ஊதிப் பார்க்கிறான். கவிதை மொழிபெயர்ப்பு விக்கிரமாதித்தன் கதையில்  தலையை மாற்றி வைக்கும் திகைப்பாகும் மொழிபெயர்ப்பாளன் தன் உடலில்  இன்னொரு கவிஞனின் தலையை  பொருத்திப் நிறுத்துகிறான்."      - சச்சிதானந்தன்  மொழிபெயர்ப்பு எவ்வளவு நுட்பமானது என்பதை இதைவிட அழகாகச் சொல்லமுடியுமா?  * பி ருந்தா சாரதி  * (புகைப்படம்: கவிஞர் சச்சிதானந்தன் அவர்களின் ' ...

பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் கார்.. வந்தாச்சு டாடா டியாகோ ஈவி!*

Image
 *பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் கார்.. வந்தாச்சு டாடா டியாகோ ஈவி!* டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக டியாகோ ஈவி (Tiago EV) எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், பட்ஜெட் விலையில் டியாகோ ஈவி எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டியாகோ ஈவி கார் விலை 8.49 லட்சம் ரூபாய் (ex-showroom) முதல் தொடங்குகிறது. டியாகோ ஈவி கார் XE, XT, XZ+, XZ+ Tech LUX என நான்கு வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது. டியாகோ ஈவி வெறும் 5.7 நொடிகளில் 60 மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என டாடா மோட்டார்ஸ் கூறுகிறது. இரண்டு வகையான பேட்டரிகளுடன் டியாகோ ஈவி வந்துள்ளது. 19.2 kWh பேட்டரியில் ஒரே சார்ஜிங்கில் 250 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். 24 kWh பேட்டரியில் 315 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என டாடா தெரிவித்துள்ளது. டியாகோ ஈவி காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் (fast charging) வசதியும் உள்ளது. DC fast charger பயன்படுத்தி டியாகோ ஈவி கார் பேட்டரியை 57 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்துவிடலாம் என டாடா கூறுகிறது. அக்டோபர் 10ஆம் தேதி முதல...

மோசடி ஆவண பதிவை ரத்துசெய்து சொத்து உரிமையாளருக்கு ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

Image
  மோசடி ஆவண பதிவை ரத்துசெய்து சொத்து உரிமையாளருக்கு ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார் போலி ஆவணங்கள் மூலம் நடந்த மோசடி ஆவண பதிவை ரத்துசெய்து, சொத்து உரிமையாளர்களுக்கு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை, மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம்-1908-ன்படி, பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே அந்த ஆவண பதிவுகளை ரத்துசெய்ய பாதிக்கப்பட்டோர் கோர்ட்டை அணுக வேண்டியதிருந்தது. எனவே தமிழ்நாட்டிற்கு பொருந்தும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்தது. போலி, ஆள்மாறாட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஜனாதிபதி கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார். போலி ஆவணங்களின் பதிவை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு திருத்தப்பட்ட சட்டம் அதிகாரம் அளிக்கிறது. சிறை தண்டனை நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்ட பதிவாளர்களிடம் புகார் மனு பெறப்பட்டால...

திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்

Image
  *திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்  என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.*  அனைத்துப் பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சந்திரசூடு தலைமையிலான அம்ர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.  தற்போதைய கருக்கலைப்பு சட்டம் திருமண பந்ததின் அடிப்படையிலானது என்று குறிப்பிட்ட நீதிமன்றம் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றம் தேவை என்று தெரிவித்தது. திருமணமான பெண்களிடம் கூட அவர்களின்  விருப்பம் இல்லாமல்  உறவு கொண்டால் அது பாலியல் வன்முறைதான் என்றும் தெரிவித்துள்ளது. சட்டம் அனுமதிக்காததால் 67% பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. *தற்போதைய கருக்கலைப்பு சட்டம் பிரிவு 3(2) திருமணமாகாத பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது. எனவே அதனை ரத்துசெய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.* ஏதேனும் இக்கட்டான சூழ்நிலையில் ஒரு பெண் தனக்கு கருவை சுமக்க முடியவில்லை என்று கருதும் போது, அவர் கருக்கலைப்பைத் தேர்வு செய்யலாம். அதற்கு சட்டம் தடையாக இருக்க முடியாது. எனவே, திருமணம் ஆனவர் ஆகாதவர...

காதல் தோல்வி கவிதைகள்

Image
  Nynarin Unarvugal love failure kavithai|sad love poem in tamil|காதல் தோல்வி கவிதைகள் காதல் தோல்வி கவிதைகள் #காதல்தோல்விகவிதை #lovefailurekavithaigal #sadlovepoemintamil video link by

நயினாரின் ஹைக்கூ கவிதைகள்|Nynarin Hykoo Kavithaigal

Image
  நயினாரின் ஹைக்கூ கவிதைகள்|Nynarin Hykoo Kavithaigal சாமானியனை பற்றிய ஹைக்கூ கவிதைகள் #ஹைக்கூகவிதைகள் #hykookavithaigal video link by

ஈ ரோடு தொண்ணூறு தாண்டி நூறையும் கடக்கும்

Image
  ஈ ரோடு தொண்ணூறு தாண்டி நூறையும் கடக்கும் ' * கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு  அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். * ஈரோடு தமிழன்பன் 90 * தமிழ் புதுக்கவிதையின் தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.  கவிதையின் எல்லா வடிவங்களையும் பரிசோதித்த முன்னோடிக் கவிஞர் .  மரபு, புதுமை , ஹைகூ , கஸல், குறும்பா என வடிவ சோதனைகளை நிகழ்த்திக்கொண்டே இருப்பவர். அவருடைய 'நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்', 'தீவுகள் கரையேறுகின்றன', 'காலத்துக்கு ஒரு நாள் ஒன்றில் முந்தி', 'சூரியப் பிறைகள்' போன்றவை எல்லாம் என் ஆரம்பகாலப் பாட நூல்கள் என்றே சொல்லலாம்.  "பத்தாவது முறை விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி  ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ." 'சூரியப் பிறைகளி'ல் இடம்பெற்றிருக்கும் புகழ்பெற்ற இந்தக் கவிதை தன்னம்பிக்கை நூல்கள் தருகிற கற்பனைத் தன்னம்பிக்கைகளைவிட இயல்பான , நடைமுறை சார்ந்த ஊக்க மருந்து.  "புகை பிடித்தால் இறப்பாய்  மது குடித்தால் இறப்பாய்  இரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய்," என்ற நையாண்டி கவிதை இன்றைய நாட்டு நிலையை சுரு...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவின் கர்ஜனை

Image
  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவின் கர்ஜனை அது ஒரு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம். ஆண்டு 1937. இடம் காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தான். கூடியிருந்த மக்கள் 50 ஆயிரத்திற்கு மேல். மேடையிலுள்ள குட்டித் தலைவர்களின் முழக்கங்கள் முடிந்தன. இரவு 10 மணிக்கு சிங்கத்தின் வீர கர்ஜனை ஒலிக்கத் தொடங்கியது. “நேற்றைய தினம் எங்களது மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களை ரிவால்வரைக் காட்டி பேச விடாமல் தடுத்து மேடையை விட்டு கீழே இறக்கிய சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே, உங்களுக்கு நெஞ்சில் உரமிருந்தால் குண்டுகளை ரிவால்வரிலே மாட்டிக்கொண்டு மேடைக்கு வரும்படி அடியேன் அறைகூவி அழைக்கிறேன். இந்த தேசம் விடுதலை ஆக, பாரத மாதா விலங்கொடிக்கப்பட அடியேன் இந்த மேடையிலே சாவதற்குத் தயார். சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே நீங்கள் தயாரா?” என்று சவால் விட்டு அழைத்த அந்த வீர கர்ஜனைக் குரலுக்கு சொந்தக்காரர் - தேசியத் தலைவர் முத்துராமலிங்கத் தேவர். ”தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்” என்ற கொள்கைக்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த பெருமகனார். “வீரமற்ற விவேகம் கோழைத்தனம்; விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம்” என்று வீரத்துடன் ...

அசோகனின் இயற்பெயர் அந்தோணி.

Image
  திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும்போதே பட்டிமன்றங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் கலக்கிக் கொண்டிருந்த அசோகனின் இயற்பெயர் அந்தோணி. மணப்பந்தல் படத்துக்காக அவரது பெயரை கே.ஏ.அசோகன் என மாற்றினார் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா. அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களோடு வில்லன், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். எம்.ஜி.ஆரோடு பல படங்கள் நடித்த அவர், நேற்று இன்று நாளை என எம்.ஜி.ஆர் படத்தைத் தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் ஆனார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் மற்றும் ஏ.வி.எம் சரவணன் ஆகியோர் அசோகனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர்கள். கிறிஸ்தவரான அசோகன் – பிராமண வகுப்பைச் சேர்ந்த சரஸ்வதியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணம் சில, பல ட்விஸ்டுகளுக்கு இடையே நடந்தது. கோவையைச் சேர்ந்த சரஸ்வதியை அசோகன் உயிருக்கு உயிராகக் காதலித்தார். இதை, பெண் வீட்டாரிடம் சொன்னபோது கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இனிமேல் எங்கள் பெண்ணை நீங்கள் சந்திக்கக் கூடாது; மீறி சந்தித்தால் போலீஸில் புகார் கொடுப்போம் என்றெல்லாம் அவர் மிரட்டப்பட்...

பகத்சிங்

Image
பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு:  செப்டம்பர்  27, 1907 இடம்:  பங்கா (லயால்பூர் மாவட்டம்), பஞ்சாப், இந்தியா பணி:  இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இறப்பு:  மார்ச்  23, 1931 நாட்டுரிமை:  இந்தியன் பிறப்பு ‘சாஹீது பகத்சிங்’ என அழைக்கப்படும் ‘பகத்சிங்’ அவர்கள், 1907  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27  ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்...

கோவி மணிசேகரன்

Image
  வெகு ஜன இதழ்களில் கோவி. மணிசேகரனின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகின. குமுதம், விகடன், கல்கி, கலைமகள், குங்குமம், இதயம் பேசுகிறது என தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். ’ஒரு தீபம் ஐந்து திரிகள்’ என்பது இவரது நூறாவது நாவல். ராஜராஜ சோழனின் வரலாற்றை கலைமகள் இதழில் ’ராஜநாகம்’ என்ற பெயரில் எழுதினார். கோவி. மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய 'குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூல், 1992ல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது. கோவி மணிசேகரன் 1954-ல் 'கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழில் தான் கோவி. மணிசேகரனின் முதல் வரலாற்று நாவலான 'அக்கினிக் கோபம்’ வெளியானது. அடுத்து 'கலை அரங்கம்’ என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். 'முருகு' மற்றும் 'மங்களம்' போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார். நன்றி: தமிழ் விக்கி

உலக வெறி நாய்க்கடி நோய் நாளின்று!

Image
  உலக வெறி நாய்க்கடி நோய் நாளின்று! வெறிநாய்க்கடி நோயை பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்த்தவும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் நாள் `உலக வெறிநாய்க்கடி நோய் தினமாக' (ரேபீஸ் டே) கடைப்பிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய்க்குத் தடுப்பு மருந்துக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மறைந்த தினம் செப்டம்பர் 28. இவரின் நினைவாக, 2007 - ம் ஆண்டில் இருந்து சர்வதேச ரேபிஸ் விழிப்பு உணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.\ உலகில் 'குணப்படுத்தவே முடியாது; நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்' என்று கவலைப்படுவதற்கும் ஒரு நோய் இருக்கிறது என்றால், அது வெறிநாய்க்கடியால் வரும் 'ரேபீஸ்'தான். அதனால்தான்அப்படிச்சொல்கிறார்கள்! எது வெறிநாய்க்கடி நோய்? ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது வெறிநாய்க்கடி (Rabies) நோய். நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை. இந்தக் கிருமிகள் நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்ற பாலுாட்டிகள் பலவற்றில் வசிக்கும். இவற்றில் ரேபீஸ் கிருமி உள்ள எந்...

அவமானங்கள்தான் ஒரு மனுஷனை பண்படுத்தும்.

Image
  அப்போ நான் வளர்ந்து வரும் பாடகன். அம்பிகாபதின்னு ஒரு படம். 1957ன்னு நினைக்கிறேன். அதுல ஒரு டுயட் பாடல். என் கூட பாடப் போகிறவர் பானுமதி. அப்போ அவர் தெலுங்குலயும் தமிழ்லயும் முன்னணி நடிகை. நன்றாகப் பாடுவார். விஷயஞானமுள்ளவர். ஆனால் கர்வமிக்கவர். இங்கே நான் அவரை தவறாகச் சொல்லவில்லை. ஜி.ராமனாதன் இசையில ’மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு’ என்ற பாடலை இருவரும் பாட வேண்டும். ரிக்கார்டிங் வந்தவர் என்னோடு பாடப்போவது யார் என்று கேட்டார். என்னை அறிமுகப்படுத்தினார்கள். உடனே அவர் முகம் சுளித்துக் கொண்டே, ’புதியவர்களையெல்லாம் ஏன் என்னோடு பாட வைக்கிறீர்கள்?’ என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டார். மாண்டு ராகத்தில் அமைந்த அருமையான பாடல் அது. ரிகர்சலில் பாடுவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டார். அப்போதெல்லாம் வாத்திய கருவிகளோடு பாடகர்களும் முழுப்பாடலையும் பாட வேண்டிய கட்டாயம். சுமார் நான்கு நிமிடப் பாடல் அது. சரியாகப் பாட அவர் பதின்மூன்று டேக்குகள் எடுத்துக் கொண்டார். எல்லா டேக்குகளிலும் நான் தம் பிடித்துப் பாடிக் கொண்டே இருந்தேன். எந்த இடத்திலும் நான் விடவில்லை. பொறுமையாக பாடினேன். ஆனால் பதினான்கா...