ஆடி 18ல் இப்படி ஒரு சிறப்பு?


 *Valvil Ori: வல்வில் ஓரி மன்னன் யார் அவருக்கு ஏன் ஆடி 18ல் இப்படி ஒரு சிறப்பு? ஓர் சுவாரஸ்யமான பதிவு...*


Valvil Ori: வில் வித்தையில் சிறந்து விளங்கியவரும், ஈகையின் மறு உருவமும், கடையேழு வள்ளல்களில் ஒருவருமான கொல்லிமலையை ஆண்ட "வல்வில் ஓரி" மன்னனின் சிறப்பை போற்றி, ஆடி மாதம் 17,18 ஆகிய இரு நாட்கள் அரசு சார்பில் விழா நடத்தப்படும்.



சங்க காலத்தில் கொடையில் சிறந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையை ஆட்சி செய்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. வில் வித்தையில் சிறந்த விளங்கிய ஓரி மன்னனின் வீரம், கொடைத்தன்மை குறித்து சங்ககால தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களில் ஏராளமான பாடல்கள்  இடம்பெற்றுள்ளன. 


ஈகையின் மறு உருவமுமான, கொல்லிமலையை ஆண்ட வல்வில்  ஓரி மன்னனின் புகழை பறைசாற்றும் வகையில், கடந்த 1975-ம் ஆண்டு  முதல் தமிழக அரசு சார்பில் வல்வில் ஓரி விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த 2022 ஆம் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்கிறது


விழாவில் வில்வித்தையில் சிறந்து விளங்கிய ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் வில்வித்தை போட்டி, பாரம்பரிய நடனங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த விழாவில் மன்னர் வகையறாக்கள் , மலைவாழ் மக்கள் மட்டுமன்றி சுற்றுப்புற மக்களும் பங்கேற்பது வழக்கம். இதனால், ஓரி மன்னன் சிலை அமைந்துள்ள கொல்லிமலை செம்மேடு பகுதி விழாக்கோலம்போல் காட்சி தருகிறது. இதுபோன்ற பல்வேறு சிறப்புகள் பொருந்திய ஓரி மன்னனுக்கு அவர் ஆட்சி செய்த கொல்லிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


கொல்லிமலை சிறப்பு:


கொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் கொண்ட கொல்லிமலை 441.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஏராளமான மூலிகை வளம் கொண்ட இந்த மலையில் 14 நாடுகளையும் உள்ளடக்கிய கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இவ்வழகிய மலைத்தொடரை காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே காட்சியளிக்கிறது

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி