இசைவாணர்களைப் போற்றுவதில் அண்ணாவுக்கு நிகர் எவருமில்லை. ஒ
இங்கிதம் அறிந்து இசைவாணர்களைப் போற்றுவதில் அண்ணாவுக்கு நிகர் எவருமில்லை. ஒரு நாள் காஞ்சியை அடுத்த அய்யன்பேட்டையில் திருமண நிகழ்ச்சியில் எனது இசை நிகழ்ச்சி நடக்கிறது. அதே நாளில் அவருடைய நண்பர் வீட்டுத் திருமணத்தில் மற்றொரு இசைவாணர் நிகழ்ச்சியும் நடைபெற்றது. (அண்ணாவின் ஆருயிர் நண்பர் டபிள்யு.கே.தேவராசனார் வீட்டுத் திருமணம்). இன்னமும் சொல்ல அந்த நிகழ்ச்சி ஒருவித போட்டி மனப்பான்மையிலேயே அமைந்து விட்டது. ஆனால் அன்பின் சிகரமான அண்ணாவிடமா பகையுணர்ச்சி ஏற்படும்? அவர்களிடம் நயமாகக் கூறி சற்று முன்னதாக அந்த நிகழ்ச்சியைத் தொடங்க வைத்து அங்கேயும் சென்று வாழ்த்திவிட்டு, இங்கே வந்து என் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
அற்புதமான இசை இரசிகர் அவர். அவரது சொற்பொழிவுகளில் இசைவாணர்களுக்கே உரித்தான பல சங்கீத சொற்களை உவமையாகக் கூறி பிரமிப்பை ஏற்படுத்துவார். எனது குருநாதர் திருப்பாம்புரம் சுவாமிநாதப் பிள்ளை இசையரசு தண்டபாணி தேசிகர், திரு.டி.என்.இராசரத்தினம், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி, கலைவாணர் ஆகிய பலரிடம் அவருக்கு இசை மயக்கம் உண்டு.
(இசைமணி சீர்காழி கோவிந்தராசன்)
இணையத்தில் படித்தது
Comments