இந்திய மக்களால் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்
ஆகஸ்ட் - 5, இந்திய மக்களால் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் நாள். ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு. ஆம், ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சில நாள்கள் முன்பு ஜம்மு - காஷ்மீர் முழுவதும் ஆயிரக்கணக்கான ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டது. 4-ம் தேதி மாலை முதல் அந்த மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. செல்போன், இணையம் போன்ற அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். மறுநாள் என்ன நடக்கப்போகிறதோ என்று மொத்த மாநில மக்களும் பயந்துகொண்டிருந்தனர். அப்போதுதான் ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்த அறிவிப்பை வெளியிட்டார். “இதுவரை ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி ஜம்மு - காஷ்மீர் மாநிலமாக இல்லாமல் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாகச் செயல்படும்” எனக் கூறினார். ராணுவத்தினரைக் கொண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அங்கிருந்த மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காஷ்மீர் மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்ட கருப்பு நாள் இன்று
Comments