*தோழர் ஜீவாவின் நேர்மை:*
*தோழர் ஜீவாவின் நேர்மை:*
கம்யூனிஸ்ட் கட்சியில் தமிழகத்தின் சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்தான் அமரர் ஜீவானந்தம்.
அவருடைய மனைவி.. ஓர் ஆசிரியை. ஒருமுறை தன்னுடைய டிரான்ஸ்பர் விஷயமாக "காமராஜரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்க" என்று ஜீவாவை நச்சரித்தாராம்.
வேறு வழியில்லாமல் காமராஜர் வீட்டிற்கு ஜீவா கிளம்பிப் போனார். அங்கே போய்விட்டாலும் அவருக்கு மனம் கேட்க வில்லை. தயங்கியபடி வீட்டுப் படியேறினார். இவ்வளவுக்கும் ஜீவாவின் நெருங்கிய நண்பர் காமராஜர்.
"வா" என்று உபசரித்து, "என்ன விஷயம்" என்று கேட்டபோது, "சும்மா உன்னை பார்க்க வந்தேன்" என்று சொல்லி சிறிதுநேரம் பேசிவிட்டு திரும்பி வந்துவிட்டாராம் ஜீவா.
*ஆகஸ்ட்-21:*
*ஜீவா பிறந்த நாள்.*
Comments