தமிழின சொற்பொழிவாளர் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் நினைவாய் சில வரிகள்
தமிழின சொற்பொழிவாளர் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் நினைவாய் சில வரிகள் :
திருநெல்வேலி மண்ணின் சிறந்த சிந்தனையாளர்
தித்திக்கும் தமிழால் பெயரெடுத்த பண்பாளர்
கவியரங்கம் கருத்தரங்கம் களம் கண்ட அறிஞன்
கனிவாய் உரைக்கும் கருப்புநிற தமிழன்
கேட்கும் மக்களின் கவனத்தை ஈர்ப்பார்
கேலியும் கிண்டலும் அழுத்தமுடன் சேர்ப்பார்
துடிப்பான பேச்சில் வருமே கலகலப்பு
துணிவான தோரணையில் தோன்றுமே வியப்பு
வரலாற்று கதைகள் சொல்வதிலும் வேகம்
வளைய மாட்டார் எதற்கும் உறுதி கொண்ட தேகம்
வெள்ளை உள்ளம் கொண்ட உயர்ந்தமதி
வெள்ளை ஆடை அணிந்த இலக்கியவாதி
கர்மவீரர் காமராசரை பற்றி இனி சொல்ல
நெல்லை கண்ணனுக்கு அடுத்து யாருமில்ல
காலம் காமராசரை நோக்கி போகுது
நெல்லை கண்ணனின் ஆத்மா கர்மவீரரை தேடுது.....
முருக.சண்முகம்
Comments