மரத்தடி பிள்ளையார்கள்*

மரத்தடி பிள்ளையார்கள்*



நன்றி குங்குமம் ஆன்மிகம்


வில்வமரப் பிள்ளையார்: தெற்கு நோக்கியிருந்தால் சிறப்புடையது, சித்திரை நட்சத்திரத்தன்று குடும்பத் தேவைக்கேற்ப மளிகைப் பொருட்களை ஏழைக் குடும்பங்களுக்கு தானமாக அளித்து வில்வமர விநாயகரைச் சுற்றி வந்தால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர்.


அரசமரப் பிள்ளையார்: மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்தால் நிலம் மற்றும் தோட்டத்தில் விளைச்சல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக் கஷ்டம் நிவர்த்தியாகும்.


ஆலமரப் பிள்ளையார்: வடக்கு நோக்கியிருந்தால் சிறப்புடையது, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று ஐந்து வகை சித்திரான்னங்களை (எலுமிச்சை, தயிர், பால், புளி, தேங்காய்) படைத்து தானமளித்தால் கடுமையான நோய்கள் விலகும்.


வேப்பமரத்துப் பிள்ளையார்:  கிழக்கு முக விநாயகர் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஐந்து வித எண்ணெய்த் தீபமான பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் மனதுக்கேற்ற வரன் அமையும்.


மாமரப் பிள்ளையார்: கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு மூன்று ஏழைச் சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால் பகைமை, போகம், பொறாமையால் பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.

[31/08, 4:11 pm] +91 99407 62319: *தத்துவம் காட்டும் விநாயகரின் திருவுருவம்*


நன்றி குங்குமம் ஆன்மிகம்


விநாயகர் சதுர்த்தி 31-8-2022


விநாயகர் திருவுருவத்தை; ஔவையார், தாம் பாடிய ‘‘விநாயகர் அகவல்’’ என்னும் திருநூலில், மிகத் தெளிவாக விவரித்துள்ளார். ‘‘பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்; வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்; அஞ்சுகரமும் அங்குர பாசமும்; நெஞ்சிற்குடிகொண்ட நீல மேனியும்’’ கொண்ட கற்பகக் களிறு; மூஷிக வாகனத்தில் எழுந்தருளி அடியார்களை ஆட்கொள்ளும் பாங்கினை, அருளியுள்ளார்.


விநாயகரின் திருவுருவத்தில் அமைந்துள்ள அங்க அவயவங்கள், மற்றும் பொருள்கள்; தத்துவரீதியாக எவ்வெவற்றைக் குறிக்கின்றன என்பதை அறிவோம்; விநாயகரின் திருவுருவம் சைவசித்தாந்தம் மற்றும் சிவாகமங்கள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரணவம் ஆகிய ஓங்காரம்; விநாயகர் முதற்கண் வழிபடும் கடவுள் ஆதலின்; அவருக்குரியதாயிற்று.


தமக்கு மேலே, வேறொரு தலைவர் இல்லாதவர், என்னும் கருத்துப்பட அமையப் பெற்றது, விநாயகர், என்னும் அவரின் திருநாமம். விநாயகரின் திருவுருவில்; சிவன், விஷ்ணு, பிரமா ஆகிய மும்மூர்த்திகளின் அருட்தன்மைகளும், செயல்களும் பொருந்திக் காணப்படுகின்றன.


ஓங்கார வடிவினர் ஞான வடிவினர், ஓங்கார வடிவினர், வேதமந்திர சொரூபி. விநாயகரின் முழுமையான வடிவம் ‘‘ஓம்’’ எனும் பிரணவத்தைக் குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பிரணவன் என்பது அவரின் திருநாமம்.


‘‘நாத விந்து களாதி நமோ நம

வேத மந்திர சொரூபா நமோ நம.’’


இவ்வாறு, அருணகிரிநாதர், திருப்புகழில், விநாயகப் பெருமானின் திருவுருவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.


விநாயகரின் திருவடிவ அமைப்பு


ஆண், பெண் இரண்டும் சேர்ந்ததே. வலது பாகம்: ஆண்; இடது பாகம்: பெண். விநாயகரது திருவுருவத்தில் அமைந்துள்ள நான்கு திருக்கரங்கள் அமரர்கூறு; வேழமுகம் விலங்கின் கூறு; பேழை வயிறும் குறுங்கால்களும்; பூதக் கூறு; என்பன ; உயர்திணை, அஃறிணை என்கின்ற திணைப்பாகுபாடு; மற்றும் ஆண், பெண், என்னும் பால்வேற்றுமை-இவற்றைக் கடந்தவர் என்னும் நிலைப்பாட்டினைக் கொண்டவர் என்பதை உணர்த்துகின்றன. உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும், தன்னுள் அடக்கம் எனச்சுட்டிச் சொல்லாமல் சொல்லும் அற்புத வடிவம் ஆக அமைந்துள்ளமை, நோக்கற்பாலது.


விநாயகரின் யானைமுகம், பிரணவ சொரூபி என்பதை உணர்த்துகின்றது. மூன்று கண்கள்; சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முச்சுடரையும் உணர்த்துவதாக உள்ளன.


விநாயகரின் இருபெரிய செவிகள்


ஆன்மாக்களை ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களின் பாதிப்புக்கள் தாக்காமல், பாதுகாத்து வினை வெப்பத்தைப் போக்கியருள்பவர் என்பதைப் புலப்படுத்துகின்றன.


பேழைவயிறு  


பிரம்மாண்டங்கள் அனைத்தும் அதனுள் அடக்கம் என்பதைக் குறிக்கின்றது.


திருவடிகள்


விநாயகருடைய திருவடிகள் ஞானத்தின் நிலைக்களன். வந்த வினையும் வருகின்ற வெவ்வினையையும் வேரறுத்துப் போக்கும், திறத்தன. ஆனையானது தனது காலிலே, அடிவைப் பவனை; முடிமீது ஏற்றும் தன்மையது. அதேபோல, ஆனைமுகக் கடவுளின் அடிதாழ்பவர்களை, அவன் உயர்நிலைக்கு உயர்த்துவான். அத்துடன் மோட்சமும் அளிப்பான்.


கும்பம் ஏந்திய கை


படைத்தல் தொழிலையும்; மோதகம் ஏந்திய கை, காத்தல் தொழிலையும்; அங்குசம் ஏந்திய கை, அழித்தல் தொழிலையும்; பாசம் ஏந்திய கை, மறைத்தல் தொழிலையும்; தந்தம் ஏந்திய கை, அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே, விநாயகர் ஐந்தொழில்களையும், தமது ஐந்து கரங்களால் புரிந்து, ஆன்மாக்களுக்குத் திருவருள் பாலிக்கின்றார்.


மூன்று சக்திகள்


விநாயகர்; இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானாசக்தி என்ற மூன்று சக்திகளை பொழிபவராக உள்ளார்.


பாசம்


பாசக்கயிற்றால், விநாயகர் உயிர்கள் உய்யும் பொருட்டுச்; சம்சார பந்தங்கள் கட்டிப்போடப்படுகின்றன.


அங்குசம்


தம்இச்சையாகத் திரிந்தோடும், மதம் பிடித்த நமது பஞ்சப் புலன்களை, இவ்வங்குசம் அடக்கி; மனம்போன போக்கிலே, போகவிடாமல் தடுத்து; நேர் வழியில் செல்லச் செய்கிறது.


அட்ச மாலை


இம்மாலையிலுள்ள மணிகள் 56 ஆகும். அவை ஐம்பத்தாறு அட்சரங்களைக் குறிப்பன என்று கருதப்படுகிறது. அட்சரங்களாவன மெய்நூல்கள் வாயிலாக, விநாயகர் நமக்கு மெய்யறிவு புகட்டுகின்றார்.


மோதகம்


வெளியே மூடியுள்ள மாவுக்குள்ளே, இருக்கின்ற பூரணம் (பயிறு, தேங்காய், சர்க்கரை சேர்ந்த கலவை), மண்டைக்குள் உள்ள மகாபுத்தியைக் குறிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.


இரத்தின கும்பம்


ஏராளமான பொன் பொருளையும்; இரத்தினங்கள், மணிகள் ஆகியவற்றையும் வரையாது, வாரி வழங்குகின்ற விநாயகரின் அருள் இயல்பைக் குறிக்கிறது.


பசு - கோடாரி


இவ் ஆயுதம், மெய்ஞ்ஞான அறிவை மறைக்கும், அஞ்ஞானத்தை, வெட்டி நீக்கும், கருவியாகக் கருதப்படுகிறது.


நாகம்


நல்லோரைக் காக்கவும், தீயோரைத் தண்டிக்கவும் பயன்படும் கருவி.


சூர்ப்பணம்


முறம் (சுளகு) போன்ற, அகன்ற காதுகள் எந்நேரமும் அசைந்து கொண்டேயிருப்பது, அடியார்களை; இடர்கள், விக்கினங்கள், அண்ட விடாமல், அவற்றை ஒதுக்கித் தள்ளுவதைக் குறிக்கின்றது.


வேழமுகம்


(யானைத்தலை) பிரணவத்தைக் குறிக்கிறது.


பாம்பு


வயிற்றைச்சுற்றி, உதரபந்தனமாகப் பாம்பு பயன்படுகிறது. மூலாதாரத்தின் நாயகன், விநாயகன். மூலாதாரத்தில், மூன்றரைச் சுற்றுள்ள பாம்பு வடிவமாகக் குண்டலினி சக்தி உறங்குகின்றது. இதனைக்குறிக்கு முகமாகவே, பாம்பு விநாயகரின் வயிற்றைச் சுற்றி அணியப் பெற்றிருக்கிறது என்று நூல்கள் கூறுகின்றன.


ஐந்து கரங்கள்


விநாயகருக்கு நான்கு கரங்கள்; அவற்றுடன் தும்பிக்கையும் சேர்ந்து, ஐந்து திருக்கரங்கள் உள்ளன. தம்மை அணுகியவர்களைக் காக்கும் கரம், அபயகரம், பூரணத்திலிருந்து பூரணத்தை (முழுமை) எடுத்தாலும் மீதமாகவுள்ளதும் பூரணமே என்ற மகாவாக்கியத்தின் பொருளை விளக்கும், மோதகத்தை; ஒரு கரத்திலும்; மதம் பிடித்துள்ள யானையை அடக்கும் அங்குசப் படைக்கலத்தை மற்றொரு கரத்திலும்; உயிர்களைப் பற்றியுள்ள பாசம் என்னும் மலங்களை அடக்கும் பாசக் கயிற்றை, இன்னொரு கரத்திலும் தாங்கியும்; உலகின் எந்தமூலை, முடுக்குகளிலிருந்தாலும் தனது அடியவர்களை, நோக்கி, நீட்டிக்காக்கும் ஊறு உணர்ச்சிமிக்க துதிக்கையுமாக; விளங்கும் ஐங்கரன் ஆகக் காட்சியளிப்பவன் பிரணவப் பெருந்தகை.


தலை


பிறைச்சந்திரனைத் தலையில் தரித்துள்ளார். குற்றங்கள் புரிந்தாரேனும், அதனை உணர்ந்து, தம் திருவடிகளை வணங்கி வழிபடுபவர்களாயின்; அவர்களை மன்னித்து அருள்புரியும், எல்லையற்ற கருணையைக் காட்டுகின்றது.


தோற்றம்


விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு திருப்பாதம், பூமியையும்; தொந்திவயிறு, நீரையும்; மார்பு, நெருப்பையும்; நெற்றிப்பிறை, காற்றையும்; வளைந்த தந்தம், ஆகாயத்தையும் உணர்த்துகின்றன. விநாயகர் பஞ்ச பூதங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.


Dr. குமாரசுவாமி சோமசுந்தரம்...

[31/08, 4:11 pm] +91 99407 62319: *பன்னிரண்டு ராசிகளுக்கான ராசியான பிள்ளையார்கள்*


பிள்ளையார் என்றாலே பிறந்த குழந்தைக்கும் பிடிக்கும். குழந்தை முதல் கிழவர் வரை விநாயகப் பெருமானைக் கண்டாலே மனதில் தனி ஆனந்தம் பிறக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. விநாயகர் சதுர்த்தி நாளன்று களிமண் பிள்ளையாரை ஓடிச் சென்று வாங்கி வரும்போது வீட்டிற்குள் விநாயகப் பெருமான் பிரத்யட்சமாய் உள்ளே வந்துவிட்டதாய் ஓர் உணர்வு. வீட்டினில் பூஜை முடித்த பின்பு அன்றைய தினத்திற்குள் குறைந்தது 108 பிள்ளையாரையாவது தரிசித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நகர்வலம் கிளம்பிவிடும் பக்தர்களும் இருக்கிறார்கள்.  இந்த நன்னாளில் அவரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் மேலும் சிறப்பு  அல்லவா...  இதோ 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகரின் திருவுருவங்கள்.  அன்று மட்டுமல்லாது எப்போதும் எங்கு தரிசித்தாலும் வணங்குங்கள். உங்களின் தியான சித்திரமாக மனதில் கொள்ளுங்கள்.


மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோதைரியம் மிக்க நீங்கள் வழிபட வேண்டியவர் வீரகணபதி.


ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் அம்பிகையின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர்கள். 12 ராசிகளில் சந்திரன் உச்சம்பெற்ற நிலையில் இருப்பது உங்களுடைய ஜாதகத்தில் மட்டுமே. இயற்கையில் ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீ வித்யா கணபதி.  


மிதுனம்: பல்வேறு திறமையை உடைய நீங்கள் கண்திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர்களின் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப்பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் கண்திருஷ்டி கணபதி.


கடகம்: பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம்கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபகசக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.


சிம்மம்: இயற்கையில் தைரிய குணம் மிக்க உங்களுக்கு என்றும் வெற்றித்திருமகள் துணை நிற்பாள். 12 ராசிகளில் தலைமைக் குணத்தினை உடைய உங்களுக்கு என்றுமே தன்னம்பிக்கை குறையவே குறையாது. அசாத்தியமான மன வலிமையுடன் என்றென்றும் வெற்றியினை ருசித்துவரும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜயகணபதி.


கன்னி: இயற்கையில் பெண்மைக் குணத்தினை உடைய நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் காரியங்களில் வெற்றி காண்பவர்கள். உங்கள் வாழ்க்கைத்

துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் உச்சிஷ்ட கணபதி.


துலாம்: அயராத உழைப்பினை உடைய  நீங்கள் கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் ஓய்ந்துவிடாது அடுத்த லட்சியத்தை நாடிச் செல்பவர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.


விருச்சிகம்: இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நினைத்த மாத்திரத்தில் காரியத்தைச் செய்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்கள். சதா பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் நர்த்தன கணபதி.


தனுசு: குரு பகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். நேர் வழியைத் தவிர குறுக்கு வழியில் செல்ல விருப்பமில்லாதவர்கள். தர்மநெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்துவரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.


மகரம்: சனி பகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒரு சில விஷயங்களில் இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக்குழப்பத்திற்கு ஆளாகும் நீங்கள் மனதினை அடக்கி ஆளக் கற்றுக்கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.   


கும்பம்: அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள். தான் அறிந்திராத விஷயத்தையும் கூட தனக்குத் தெரியாது என்பதை வெளிக்காண்பிக்காது செயல்பட்டு வருவீர்கள். அதே நேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.


மீனம்: இயற்கையிலேயே கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள். அடுத்தவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்துடன் பழகிவருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள் நான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.

...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி