முன்ஷி பிரேம்சந்த் (Munshi Premchand) பிறந்த தினம்
இந்தி இலக்கிய உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய முன்ஷி பிரேம்சந்த் (Munshi Premchand) பிறந்த தினம் இன்று (ஜூலை 31). உத்தரப் பிரதேச மாநிலத்தில் பனாரஸ் அருகே லம்ஹி கிராமத்தில் (1880) பிறந்தார். துனியா கா அன்மோல் ரதன்’ என்ற இவரது முதல் சிறுகதை 1907-ல் வெளியானது. தொடர்ந்து பல நூல்கள் வெளிவந்தன. உருதுவிலும், பிறகு இந்தியிலும் எழுதினார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அரசு வேலையைத் துறந்தார். முழு மூச்சாக இலக்கியப் பணியில் இறங்கினார்.பனிரெண்டுக்கும் மேற்பட்ட புதினங்கள், இருநூற்று ஐம்பது சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகள் மேலும் பல்வேறு மொழிபெயர்ப்புகள் என்று சாம்ராட் பட்டத்திற்கு தகுதியானவர்தான் பிரேம்சந்த். பிரேம்சந்தின் காலம் என்பது ஸ்வாமி விவேகானந்தர், கோகலே, திலகர் அதன் காந்தி என்று பல்வேறு தலைவர்கள் நாட்டில் பெரும் தாக்கத்தை உருவாக்கிய காலம். அது பிரேம்சந்தின் படைப்புகளிலும் காணலாம். சுதந்திர போராட்டம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி சீர்திருத்தம், தொழிலாளர்களின் ஒடுக்கப்பட்ட நிலைமை என்ற கருத்துக்கள் இவர் படைப்புகளில் விரவி இருப்பதை நாம் காணலாம். தமிழகத்தில் பாரதி போன்று ஹிந்தி மற்றும் உருது மொழியில் ஒரு புது பாதையைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமை முன்ஷி பிரேம்சந்த்
அவர்களையே சாரும். சேவா சதன், நிர்மலா, கோதான், கர்மபூமி என்பவை இவரின் முக்கியமான சில படைப்புகள், இவரது பல புத்தகங்கள் தமிழ்மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.
1936ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் பிரேம்சந்த் காலமானார்.
Comments