பன்னிரண்டு ராசிகளுக்கான ராசியான பிள்ளையார்கள்*
பன்னிரண்டு ராசிகளுக்கான ராசியான பிள்ளையார்கள்* பிள்ளையார் என்றாலே பிறந்த குழந்தைக்கும் பிடிக்கும். குழந்தை முதல் கிழவர் வரை விநாயகப் பெருமானைக் கண்டாலே மனதில் தனி ஆனந்தம் பிறக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. விநாயகர் சதுர்த்தி நாளன்று களிமண் பிள்ளையாரை ஓடிச் சென்று வாங்கி வரும்போது வீட்டிற்குள் விநாயகப் பெருமான் பிரத்யட்சமாய் உள்ளே வந்துவிட்டதாய் ஓர் உணர்வு. வீட்டினில் பூஜை முடித்த பின்பு அன்றைய தினத்திற்குள் குறைந்தது 108 பிள்ளையாரையாவது தரிசித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நகர்வலம் கிளம்பிவிடும் பக்தர்களும் இருக்கிறார்கள். இந்த நன்னாளில் அவரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் மேலும் சிறப்பு அல்லவா... இதோ 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகரின் திருவுருவங்கள். அன்று மட்டுமல்லாது எப்போதும் எங்கு தரிசித்தாலும் வணங்குங்கள். உங்களின் தியான சித்திரமாக மனதில் கொள்ளுங்கள். மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது ...