ஒரே ஹெட்செட்டில் கேட்ட இசை/-அகதா-


 ஒரே ஹெட்செட்டில் கேட்ட இசை


ஒரே குடையுள் அன்பின் மழை
கோப உதடுகளில் முதல் முத்தம்
முதலில் பரிசளித்த புத்தகம்
ஒன்றாக உண்ட ஐஸ் கிரீம்
மாற்றி மாற்றி அருந்திய ஒற்றைத் தேநீர்
இப்படி ஏதேனும் ஒன்று உன் நினைவைத் திறக்கும் சாவியாகிப் போகிறது எனக்கு
நீ மட்டும் நினைவின் பேழையைப் பூட்டிவைத்துவிட்டு சாவியையும் தொலைத்துவிட்டதுபோலவே நடந்துகொள்கிறாய்



-அகதா-

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி