இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர் எம்.கே.ஆத்மநாதன்
இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர் எம்.கே.ஆத்மநாதன் நினைவு நாள் இன்று ஜூலை 15, 2013 அவரைப்பற்றி பற்றி இன்றைய இளைய தலைமறை அதிகம் அறிந்திருக்காது. ஆனால் அவர் பாடல்களை கேட்டு ரசித்திருக்கும்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிறந்த ஆத்மநாதன், நகை தொழில் செய்து வந்தார். நாடகத்தின் மீது கொண்ட ஆவல் காரணமாக 11 வயதில் சென்னை வந்து டி.கே.சண்முகம் நாடகக் குழுவில் நடிகராக அறிமுகமானவர். ரத்தபாசம்' படத்தில் பாதகம் செய்வது ஏனோ? ரத்தபாசம் அழிப்பது ஏனோ?' பாடல் மூலம் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே, தடுக்காதே என்னை தடுக்காதே, குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா, உனக்காக எல்லாம் உனக்காக, இன்று போய் நாளை வாராய், ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் உள்பட 75 படங்களில் 120க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். நாலு வேலி நிலம், ரத்த பாசம் உட்பட 20 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் எனப் பல துறைகளில் பரிமளித்தவர். கலைமாமணி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளவர். ஆத்மநாதன் சினிமாவில் செய்தது குறைவுதான். ஆனால் எல்லாமே நிறைவானது.
Comments