உலக சாக்லேட் தினம் இன்று.
உலக சாக்லேட் தினம் இன்று.
இத்தினத்தில் சாக்லேட் உண்பதன் சில நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
1 .பிரிட்டனில் உள்ள சில ஊட்டச்சத்து நிபுணர்கள் டார்க் சாக்லேட் உண்பது ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்கிறார்கள். அதுபோல, இதயத்திற்கும் மிக நல்லது என்கிறார்கள் . ஞாபக சக்தியை மேம்படுத்தும் என்று சொல்லும் ஊட்டச்சத்து நிபுணர்கள், புற்று நோய் பாதிப்பை குறைக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
2 . கோகோவில் ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. கோகோ கசப்புதன்மை உடையது. ஆனால், அதே நேரம் சுவைக்காக அதில் சேர்க்கப்படும் பால் மற்றும் சர்க்கரை, இந்த ஆன்டி ஆக்ஸிடெண்ட் தன்மையை குறைக்கிறது. இதன் பொருள், டார்க் சாக்லேட் மற்ற சாக்லேட்டுகளைவிட நல்லது என்பதுதான்.
3 .அண்மையில் ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு வாரத்திற்கு ஒருமுறை சாக்லேட் உட்கொண்டால் நினைவாற்றல் மேம்படும் என்பது தெரியவந்துள்ளது.
Comments