மாஸ்கோவில் மிகப்பெரும் தீ
இன்று ஜூலை 28, 1493 - ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. புனித நிகோலஸ் என்ற கிறித்தவ ஆலயத்தில் ஏற்றப்பட்டிருந்த மெழுகு வத்தி பட்டு முதலில் ஜன்னல்திரை தீப் பிடித்தது. அப்போது வீசிய பெரும் காற்று காரணமாக மாஸ்கோ நகர் முழுவதும் பரவியது. கிரெம்ளின் மாளிகை புனித மேரி ஆலயம் உள்ளிட்ட பெரும் கட்டிடங்கள் தீக்கிரையாயின. அக்காலத்தில் நவீன தீயணைப்பு சாதனங்கள் இல்லாததன் காரணமாக தீயை விரைந்து கட்டுப்படுத்த இயலவில்லை. இத்தீயினால் பெருத்த பொருட் சேதங்கள் உண்டான போதிலும் 200 பேர்கள் மட்டுமே மரணமுற்றனர் என்று சொல்லப்படுகிறது
Comments