உலக புலிகள் நாள்
ஜூலை 29 - உலக புலிகள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. ஆனால் இன்று புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு 3200 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 3 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது 1,706 புலிகள் உள்ளன. அடுத்ததாக, மலேசியாவில் 500 புலிகள் காணப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால் தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லையெனில் காடுகளின் வளம் குறையும்..
Comments