சுப்பிரமணிய சிவாவின் நினைவு நாள்
எனது ஜாதி - பாரத ஜாதி, எனது மதம் - பாரதிய மதம், என் வழிபடு தெய்வம் - பாரத மாதா’ என்று பாரத மாதாவுக்கு ஆசிரமம் அமைத்து, ஊர் ஊராகப் பிரசாரம் செய்து நாட்டுப்பற்றை மக்களுக்கு ஊட்டி வளர்த்து 47-ல் நாம் விடுதலை பெற்றபோது அதனைக் காணாமலே தனது 41 வயதிலேயே வீரமரணம் எய்திய சிவா என்ற சுப்பிரமணிய சிவாவின் நினைவு நாள் இன்று - ஜூலை 23, ‘சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள் வ.உ.சி. என்ற கப்பலோட்டிய தமிழனும், சுப்பிரமணிய சிவாவும். சுப்பிரமணிய சிவா அரசு வேலையை தூக்கி எறிந்து விட்டு தமிழகம் முழுக்கசுற்றுப்பயணம் செய்து விடுதலைக்கனலை மூட்டினார்
ஞானபானு இதழை நடத்திய அவர் அதில் வ.உ.சி மற்றும் பாரதி ஆகியோரை எழுத வைத்தார். இரண்டு முறை சிறை தண்டனை பெற்றாலும் அவர் விடுதலைப்போரால் தன்னால் ஆன பங்களிப்பை தந்துகொண்டே இருந்தார். பாரத மாதாவிற்கு பாப்பாரப்பட்டியில் கோயில் கட்ட வேண்டும் என்று சித்தரஞ்சன் தாஸ் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டி நிதி திரட்டிய அவர் அந்த ஆலயத்தில் பூசாரிகள் கிடையாது என்றும், எளிய மக்களே வழிபடுவார்கள் என்றும் உறுதி கூறினார். அந்த கனவு நிறைவேறும் முன்னரே மரணமடைந்தார்.
Comments