(நபார்டு) நிறுவன நாள்
ஜூலை 12, 1982 இன்று தேசிய விவசாய, கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) நிறுவன நாள் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி என்பது இந்தியாவில் ஒரு மேம்பாட்டு நிதி அமைப்பாக இருக்கிறது. இது விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான திட்டமிடல், கொள்கை மற்றும் செயல்பாடுகள் போன்ற கடன் செயல்களை நிர்வகிக்கிறது.
NABARD) இந்தியாவின் நிதித் தலைநகராகக் கருதப்படும் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வளர்ச்சிக்கான உச்ச வங்கியாகும்.[3]1982ஆம் ஆண்டு சூலை 12 அன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டம் ஒன்றின் மூலம் இந்தியக் கிராமங்களில் கடன்வழங்கலை உயர்த்தி விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் இந்த வங்கி நிறுவப்பட்டது. நாபார்ட் வங்கிக்கு "இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை, திட்டமிடல் மற்றும் செயலாக்கம் தொடர்பான விடயங்களில்" முழுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் கிராமப்புறங்களில் விவசாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடன் வழங்குவது தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அதிகாரத்தை வைத்திருக்கும் அமைப்பு நபார்டு ஆகும். கிராம அபிவிருத்திக்கான அபிவிருத்தி திட்டங்களை ஊக்குவிப்பதற்காக முதலீடு மற்றும் உற்பத்தி கடன் ஆகியவற்றை நபார்ட் வழங்குகிறது
Comments