சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் "தமிழ் முரசு" ஆரம்பிக்கப்பட்ட தினம்
ஜூலை 6, வரலாற்றில் இன்று.
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் "தமிழ் முரசு" ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று.
தமிழ் முரசு சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையாகும். இது 1935 ஆம் ஆண்டு ஜூலை 6 இல் தமிழவேள் கோ. சாரங்கபாணியால் ஆரம்பிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் 16 பத்திரிகைகளில் இதுவும் ஒன்று. ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது ஆகப்பழமையான பத்திரிகை இது.
குடும்பப் பத்திரிகையாக இருந்த தமிழ் முரசை சிங்கப்பூரின் அனைத்து மொழி நாளிதழ்களையும் வெளியிடும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் 1995 ஆம் ஆண்டில் ஏற்று நடத்தி வருகிறது
Comments