பத்து வருடத்திற்கு முன்பு உள்ள கதை

 



லிங்குசாமி அதிரடி வெற்றி படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன்பின் சிறிது காலம் படங்களை இயக்காமல் கதைகளை எழுதி கொண்டிருந்தார். அவர் கடைசியாக எடுத்த படம் சண்டக்கோழி 2. அதன்பின் இப்போதுதான் “தி வாரியர்” என்ற படத்தை தெலுங்கு மொழியில் எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு லிங்குசாமி எடுத்த சண்டகோழி-2 படத்திற்குப் பின் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து “தி வாரியர்” என்ற படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பல சிக்கல்கள் வந்தது, அதையெல்லாம் சமாளித்து படத்தை வெற்றிகரமாக ரிலீஸ் செய்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போதே அனைவரின் மனதிலும் ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது ஒரு புது ஹீரோவை வைத்து 10 ஆண்டுகளுக்கு முன் உள்ள கதையை இப்போது எடுத்திருக்கிறார். படம் ஓடுமா என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.

இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னே லிங்குசாமி புரோமோஷன் வேலைகளை அதிரிபுதிரியாய் அசத்திவிட்டார். பாரதிராஜா, பார்த்திபன், என பல பெரிய தலைகளை இந்த படத்தின் புரமோஷனுக்கு அழைத்து அந்த விழாவை தடபுடலாக நடத்தி விட்டார்.

இந்தப்படம் ரிலீஸ் ஆனதும் மக்களிடம் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை. இது வழக்கமான லிங்குசாமி படம் தான். படத்தில் புதிதாக ஒன்றுமில்லை. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள கதையை எடுத்து சொதப்பி விட்டார் என்றெல்லாம் எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

தி வாரியர்” படம் பையா படம் எடுக்கும் போது எழுதப்பட்ட கதையாம். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் வைத்த பெயர் “எண்ணி ஏழு நாட்கள்” இந்த படத்தை தான் இப்பொழுது தி வாரியர் என்று எடுத்து வெளியிட்டிருக்கிறார். பத்து வருஷத்துக்கு முன்னாடி உள்ள கதையை இப்ப கொடுத்ததற்கு, அந்த பருத்தி மூட்டை பேசாமல் குடோன்லயே இருந்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

courtesy

https://www.cinemapettai.com/





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி