உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.
உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.
ஹெப்படைடிஸ் சி எனப்படும் கல்லீரல் நோய், எய்ட்ஸ் நோயை போன்ற ஒரு கொடிய நோய். அதுவும் இது ஒரு தொற்று நோயாகும். இந்த நோயின் தாக்கம் அதிகமாகும் போது கல்லீரலில் புற்று நோய் ஏற்படுகிறது. எனவே இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.
அதன் பொருட்டே ஹெப்படைட்டிஸ் பி என்கிற வைரஸை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் திரு. புளூம்பர்க் ( Blumberg) – ன் பிறந்த தினமான ஜூலை 28 ஆம் தேதியன்று அவரின் நினைவாக உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கல்லீரல் 70 சதவீதம் பாதிக்கும் வரை நிறைய பேருக்கு பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தெரிவது இல்லை. ஆனாலும் மஞ்சள் காமாலை போன்றவை உடனடி சிகிச்சையின் மூலம் குணமாகும். அது போல மற்ற கல்லீரல் நோய்களுக்கும் தொடர் சிகிச்சைகள் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
Comments