அமைதிப்பூங்கா திருச்சி.!!

 *திருச்சி*



சோழர்கள் குதிரைக் குளம்படியும் தூள் பறக்கும் இளைஞர்  சிலம்படியும் -இது

ஊர் என்றால் உறையூராம்

தேர் என்றால் 

உச்சிப்பிள்ளையாரும்

தாயுமானவரும்

தேராக கொண்டு

காவேரி ந தி நித்தம் நித்தம்

 நாட்டியமாடும்

திருச்சி-இது

ஒங்கி ஒலித்த திருச்சி

ராணி மங்கம்மாள் என்ற பெண்ணரசி ஆண்ட திருச்சி.!!


நீண்டு கிடக்கும் வீதிகளும்

- வான் நிமிர்ந்து முட்டும் கோபுரங்களும்

ஆண்ட பரம்பரை சின்னங்களும்- தமிழ் அழுந்த பதித்த சுவடுகளும்

காண கிடைக்கும் பழமையான திருச்சி தன்

கட்டுக்ககோப்பால் இளமையான திருச்சி.!!


சைவத்திற்கு

தாயுமானவரும்

திருவானைக்கோவிலும்

சமயபுரம் மாரியம்மனும்

உறையூர் வெக்காளியம்மனும்

வைணவத்திற்கு

திருவரங்கப் பெருமாளும்

கிருத்துவர்களுக்கு

லூர்துமாதா ஆலயமும்

இஸ்லாமியர்களுக்கு

ஹஜரத் வலி ந தர்ஷா பள்ளிவாசலும்

காணக்கிடைக்கும் திருச்சி-இது சர்வமதமும்

கட்டுக்கோப்பாய் வாழும்

திருச்சி.!!


சிரா எனும் சமண முனி

பள்ளிக்கொண்டதால்

சிராப்பள்ளியே

திருச்சிராப்பள்ளி

ஆன ஊர்

திருச்சி.!!


நீண்ட நெடிய காவேரியும்

அகண்ட காவேரியில் பிறந்த கொள்ளிடமும்

கரிகால் பெருவளத்தான் எழுப்பிய கல்லணையும்

நிமிர்ந்து நிற்கும் திருச்சி-இது வற்றாத

ஜீவ ந்தியால் நீர் வளம்

கொண்ட திருச்சி

-இது

சோழநாடு சோறு உடைத்த 

திருச்சி.!!


கல்வியில் சிறந்த

திருச்சி

கற்போர் அனைவருக்கும்

வகை வகையாய் கலைக்கல்லூரிகள் முதல் வேளாண்மை மருத்துவ பொறியியல் கல்லூரிகள் நிறைந்த திருச்சி -இது

கண்ணதாசனை

இயசு காவியம் படைக்க வைத்த

கலைக்காவேரி

கொண்ட திருச்சி.!!


ஆதி முதல் ஆலைகள் தொழில்கள் பூத்த திருச்சி

வின்ஸ்டன் சர்ச்சில் குடித்த உறையூர் சுருட்டு முதல் 

தூப்பாக்கி தொழிற்சாலை

பொன்மலை ரயில் பணிமனை

பெல் பாய்லர் தொழிற்சாலை

என 

தொழிற்சாலை

வளர்த்த திருச்சி- இது

பெரும் பெரும் அரசியல்கட்சிகள்

மாநாடு

நடத்தி

ஆட்சியாளர்களுக்கு

திருப்புமுனை தந்த

திருச்சி.!!


தமிழ் வளர்த்த தைரியநாதன்

வீரமாமுனிவரும்

முதல் பெண்களுக்கான

பத்திரிக்கை தொடங்கிய

வ.வே.சு ஐயரும்

கண்ட திருச்சி- இது

தன் திரைப்படபாடலால்

எம்.ஜி.ஆரை ஆட்சியில் 

அமரவைத்த 

ரங்கராஜன்

என்ற கவிஞர்

வாலியும்

அறிவியல்

எழுத்தாளர்

ரங்கராஜன்

என்ற

சுஜாதாவையும்

படைத்த

திருச்சி.-இது

அப்துல் கலாம்

பயின்ற திருச்சி.!!


தமிழ் திரையுலகின்

முதல் சூப்பர் ஸடார்

எம்.கே.டி.பாகவதரும்

நடிகவேள் எம்.ஆர்.ராதாவும்

பிறந்த திருச்சி-இது

நடிகர் திலகம்

சிவாஜி கணேசனை

வளர்த்த திருச்சி.இது

எம்.ஜி.ஆரால் தமிழகத்தின்

இரண்டாம் தலைநகரமாய்

அடையாளம் கண்ட திருச்சி.!!


ஈ.வே.ரா. பெரியாரின்

பெரியார் மாளிகை

புத்தூரில் கண்ட திருச்சி- இது

திராவிட கட்சி தலைவர்கள்

அனைவருக்கும்

புனித மெக்கா

தலைமை செயலகம்

என்றே 

அழைக்கப்

பட்ட திருச்சி.!!


மீசை முளைத்த சோழர்களும்- பின்

நாயக்கர்களும்-மண்

ஆசை வளர்தத ஆங்கிலேயர்களும் அந்த ஆங்கிலேயர்களில்

சில கண்ணியர்களும்

ஆட்சி புரிந்த 

திருச்சி-இது அந்நியர் ஆட்சியினால்

மெயின் கார்டு கேட்

என்றும்

டோல்கேட்

என்றும்

ஆங்கிலேயர்

வைத்த பெயருடன்

விளங்கும்

திருச்சி.!!


போட்டி வளர்க்கும் மன்றங்களும் -

எழும் பூசை மணிகளின்

ஓசைகளும்- இசை நீட்டி முழங்கும் பேச்சொலியும் - நெஞ்சில் நிறையும்

திருச்சி வானொலியும்

தொடந்து ஓலிக்கும்

எழில் திருச்சி-கண்

தூங்கா காந்தி மார்க்கெட்

வணிகர்கள் நிறைந்த

தொழில் நகரம் திருச்சி.!!


வேலை இல்லா இளைஞர்கூட்டம்

வெட்டி அரசியல் பேசும்

திருக்கூட்டம் ஏதுமில்லா ஊர்

திருச்சி-இது

யாதும் ஊரே

யாவரும்

வசிக்கலாம்

என்று

சாதிச் சண்டை

மதச்சண்டை

ஏதுமில்லா

அமைதிப்பூங்கா திருச்சி.!!


sharing


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி