ஔவை மண்ணின் தலைமகனே
அகிலம் அறிந்திட அறிவை தந்த வள்ளலே
ஆற்றல் தந்திட ஆறுகளில் அணைக்கட்டிய மன்னனே
இரவு பகல் பாராமல் மக்கள் நலம் பேணியவரே...
ஈன்ற தாய் போல் மக்களை பாதுகாத்தவரே
உலகம் போற்றிட படிப்போடு பசியறிந்து உணவு தந்த உத்தமரே
ஊரெங்கும் நீங்கள் திறந்த கல்விக்கூடங்களில் பயனடைந்தோர் பலர்
எழுச்சி பாதையிலே என் நாட்டை வழி நடத்தியவரே
ஏர் தூக்கும் உழவர்களின் ஏழை பங்காளரே
ஐம்புலனும் துடிக்கிறது எம் தந்தையே
நீங்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லையென்று
ஒருபோதும் தமக்காக வாழ்ந்ததில்லை...
ஓயாமால் ஓடினாய்
ஔவை மண்ணின் தலைமகனே...
Comments