பனகல் அரசரின் பிறந்த நாள்.

 இன்று பனகல் அரசரின் பிறந்த நாள்.

 அந்த மாமனிதனைப் பற்றிய அரிய தகவலினை அறிந்திடுவோம்.



 கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் அருகில் அமைந்தது தான் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரிக்கு தனக்கு சொந்தமான ஹைட் பார்க் தோட்டத்தை இலவசமாக தந்தவரும்  சென்னை மாகாணத்தின் முதல் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து பின்பு முதலமைச்சராக  இருந்தவருமான 'பனகல் அரசர் "என்று சொல்லக்கூடிய "ராம ராய நிங்கார்'"


1866 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் நாள் காளஹஸ்தியில் பிறந்தார். 


 இவர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பும், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பு பின்னர் சட்டப் படிப்பும் படித்தார். 



1912 ல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு  1915வரை  உறுப்பினராக நீடித்தார். 1917 ல் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 


1919 ல், பிராமணர் அல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி, பிரித்தானியா நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி குழுவில் பனகல் அரசர் அங்கம் வகித்தார். 


 சென்னை மாகாணத்தில், 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ல் திரு சுப்புராயலு அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் இவர் உள்துறை அமைச்சராக இருந்தார்.


 முதலமைச்சர் திரு சுப்புராயலு அவர்கள், உடல் நலம் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக, ராஜினாமா செய்ததால்,  பனகல் அரசர் அவர்கள் 1921 ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் நாள் முதலமைச்சரானார். 


 பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாகாண மருத்துவத்துறை ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் இருந்தது. அந்த ஆதிக்கத்தை அகற்றி அதற்கான சட்டமியற்றி இந்தியர்களை  மருத்துவத்துறைக்கு பங்கு பெறச் செய்தார்


 எதிர்ப்பு எங்கிருந்து வந்தாலும், அது இந்த நாட்டுக்கு நன்மை  பயக்குமானால், அந்த எதிர்ப்பை வரவேற்க தயாராக உள்ளேன். தீமை விளைவிக்குமா னால் அந்த எதிர்ப்பை எதிர்த்து  முறிடிப்பேன் என்று பனகல் அரசர் மசோதாவின் மீது பேசினார். 


மருத்துவத் துறைக்கான மறுமலர்ச்சி மசோதா இவர் முதலமைச்ச ராக இருந்த காலத்தில் சட்டமாக்கியது.



 தொழிற் சாலை திட்டத்தை கொண்டு வந்து, சென்னை மாகாணத்தில் தொழிற்சாலை பெருகவும்,  அதே நேரத்தில் தொழிலாளர் பாதுகாப்பாய்  இருக்கவும் ஆவணம் செய்தார். 


1921 ல் பெண்களுக்கான வாக்கு உரிமைக்கு வழிவகை செய்தார். அடுத்து இவர் கொண்டு வந்தது இட ஒதுக்கீடு சட்டத்தின் முதல் கட்டமாக வகுப்புவாரி உரிமை சட்டம்.  இச்சட்டத்தின் மூலம் அரசுப் பணிகளில் அனைத்து சாதியினரும் பங்கேற்க வாய்ப்பு உருவானது. 


 சென்னை பல்கலைக்கழகத்தில். தமிழ் மொழியைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்தபோது இவரது பங்கு மகத்தானது.


தமிழுக்காக, சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வேரூன்றியது இந்த மாமனிதனால்...


 இவரது நினைவாகத்தான் சென்னை தியாகராய  நகரில் பாண்டி பஜாரின் அருகில் பனகல் பார்க் என பெயர் வைக்கப்பட்டுள்ளது நாம் அறிவோம்.



 முருக.சண்முகம்.

Comments

மிகச்சிறப்பான, சுருக்கமான, அரிய செய்கள், அறியப்படவேண்டிய ஆவணக் கட்டுரை

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி