பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள்
: இன்று தமிழுக்கு தொண்டாற்றிய
பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சூரியநாராயணன்.
✍ இவர் தமிழ் மொழி, தத்துவத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். செந்தமிழ் நடையில் இவர் சுவைபட விவரிக்கும் ஆற்றலில் ஈர்க்கப்பட்டு, பிற துறை மாணவர்களும் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பார்கள்.
✍ தமிழ் அறிவும் ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். சென்னை செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார்.
✍ இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
✍ தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்த மற்றும் தமிழர் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பரிதிமாற் கலைஞர் தனது 33வது (1903) வயதில் மறைந்தார்.
Comments