உலக அளவிலான செஸ் விளையாட்டு நம் தமிழ்நாட்டில்
இன்று (28.07.2022) உலக அளவிலான செஸ் விளையாட்டு நம் தமிழ்நாட்டில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்த சதுரங்க விளையாட்டுத் தொடர்பாக சில வரிகள்:
அறுபத்து நான்கு சதுரமான கட்டம்
அதற்குள்ளே காய் நகர்த்தும் ஆட்டம்
தமிழகம் பெற்றது நல்லதொரு வாய்ப்பு
தரணியில் பலருக்கு இவ்விளையாட்டில் ஈர்ப்பு
உலகளாவிய வீரர்கள் மகாபலிபுரத்தில் கூடுவர்
ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டு ஆடுவர்
வீரர்களை முன்னிறுத்தி தயாராகும் களமே
கை விரல்கள் துடிப்புடன் வேகமாய் ஆடுமே
களிரும் இங்கே நேராக போகுமே
கடிவாளகுதிரை மூன்று கட்டம் தாவுமே
குறுக்கு வாட்டம் பிஷப்பும் நகரும்
குறுக்கும் நெடுக்காக ராணியும் தொடரும்
எல்லோரும் ராசாவுக்கு கவசமாவர் எப்புறமும்
எப்போது ஏமாறுபவரென இருப்பர் இன்னொரு புறமும்
செக்.. செக்.. சொல்லும் திக் திக் ஆட்டம்
சில நிமிடங்களில் முடியும் ஒருவருக்கு கொண்டாட்டம்.
முருக.சண்முகம்
Comments