இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் இன்று - ஜூலை 7, 1859
மிகவும் தாழ்த்த
ப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர், இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். கீழ்சாதி என்ற சாதி பாகுப்பாட்டை முறியடித்து, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணிபுரிந்தார். தொழிலால் அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், அவர் ஒரு தலைச்சிறந்த அரசியல்வாதி, தலித் ஆர்வலர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். தலித் இனத்தை சார்ந்த மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளி என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தியாவில் தலித் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்து வந்த இரட்டமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் நினைவு கூறத்தக்கவை
Comments