லூயிஸ் பாஸ்டர் (LOUIS PASTUER )
வரலாற்றில் இன்று ஜூலை 6, 1885 - லூயிஸ் பாஸ்டர் (LOUIS PASTUER ) என்ற பிரெஞ்சு மருத்துவ விஞ்ஞானி வெறிநாய் கடியில் இருந்து மனிதர்களைக் காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார். வெறிநாய்க்கடி மனிதர்களுக்கு பெரும் சிக்கலாகவும் மிகப்பெரிய சவாலாகவும் இருந்தது. வெறிநாய் கடித்தால் அந்த நாயை போலவே நடந்து கொண்டு, பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். ' நாய் கடித்த இடத்தில் நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு போடுதல், சதையைக் கொத்தாக வெட்டி எடுத்தல்' என ரத்தம் உறைய வைக்கும் முறைகள் அந்த நோயை குணப்படுத்த அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவ்வாறான சிகிச்சைகளும் பலன் தருவதாக இல்லை. வெறி நாய்க்கடிக்காளானோரின் பாதிப்புக்கான உண்மைக்காரணத்தை அறிய பாஸ்டர் பெரிதும் முயன்றார். பல நாய்களின் பின்னர் உயிரை பணயம் வைத்துத் திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்குக் காரணம் என்று உணர்ந்தார். அதனை முறியடிக்கும் மருந்தினை பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின்னர் அவர் கண்டு பிடித்தார்.
Comments