திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்த மணிவண்ணன் பிறந்த நாள் (ஜூலை 31,
.
: இன்று திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்த மணிவண்ணன் பிறந்த நாள் (ஜூலை 31, 1954 - ஜூன் 15, 2013) மணிவண்ணன் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.
. சினிமாவில் தீவிரமாக இயங்கிக்கொண்டே அரசியல் இயக்கங்களிலும் பங்கேற்றுவந்தவர் மணிவண்ணன். தொடக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்தவர் பிறகு மார்க்சியம். தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு ஆகிய அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தார்.
கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு உள்ளிட்ட பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகளைப் பின்பற்றிவந்த மணிவண்ணன் அவற்றைத் தன் படங்கள் வாயிலாக வலியுறுத்தினார். பிரச்சாரமாக அல்லாமல் ஜனரஞ்சகக் கலை அம்சத்துடன் முற்போக்குக் கருத்துகளைக் கதைகளுக்குள்ளும் காட்சிகளுக்குள்ளும் பொருத்தினார். தான் எழுதிய, இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல் நடிகராக நடித்த படங்களிலும் சமூக அவலங்களைப் பகடி செய்யும் வசனங்களை முற்போக்குக் கருத்துகளையும் நகைச்சுவை வழியாக நுழைக்கும் திறமையும் சாதுரியமும் வாய்க்கப் பெற்றிருந்தார்.
Comments