செரோபோபியா (Cherophobia)

 செரோபோபியா  (Cherophobia) 



போபியா (phobia)பற்றிய விழிப்புணர்வு இங்கு மிகக் குறைவு என்பதால் செரோபோபியா பற்றித் தெரிந்து இருப்பதற்கான வாய்ப்பு குறைவு தான். 


போபியா என்பதற்கு பயம் என்பது தான் அர்த்தம்.இங்கு நம்முள் பலர் பயப்படக் கூடிய சிலவற்றுள் முக்கியமானவை தனிமை.அதற்காக மாதத்தில் ஒருநாள் வருடத்தில் ஒரு நாள்  தனிமையை பார்த்து பயப்படுவது போபியா ஆகாது. போபியா என்பது நடக்காத காரியங்களை நடந்தது போன்று ஊகித்து தன் சுயத்தை மீறிய பயம் மற்றும் பதட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை .தனிமையைப் பார்த்து பயப்படும் (Fear of alone) போபியாவை  Autophobia என்று கூறுவார்கள். 


சுருக்கமாக சொல்லப்போனால், 

தெனாலிராமன் படத்தில் கமல்ஹாசன் அவர்கள்  சிவமயம் போல் எனக்கு எல்லாம் பயமயம் என்று கூறும் வசனம் தான் Phobia.


தனிமை போயியாவை விட அதிகளவில் மக்களிடம் மூட நம்பிக்கையாக பரவுகின்ற செரோபோபியா  (Cherophobia)  பற்றி தான் பார்க்க போகிறோம். 


Chero என்பது ஒரு கிரேக்க சொல். 

Chero என்றால் மகிழ்ச்சியடைதலை குறிக்கிறது. 


அதென்ன செரோபோபியா என்று கேட்கலாம். நமக்கு தெரிந்த  பெயர் தான் என்று இக்கட்டுரை  படிக்கும் சிலர் யோசிக்க கூடச் செய்யலாம். 


சின்ன வயதில் நண்பர்களுடன் பேசி விளையாடி கொண்டிருக்கும் போது நம்முள் சிலர் இன்னைக்கு ரொம்ப சிரிச்சிட்டேன் எங்க அப்பா  கிட்ட அடி வாங்க போறேன் என்று சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள். 


சிறு வயதில் இருந்தே ஆரம்பித்த இப்படியான எண்ணங்கள் நாளடைவில் பாதிப்பை உண்டாக்கும் அளவில் மாறுகிறது அதற்கு பெயர் தான் "செரோபோபியா".


சிறிது நேரம் மகிழ்ச்சியாக இருந்தால் எதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று தங்களுக்குள்ளே யோசித்து யோசித்து நாளடைவில் மகிழ்ச்சியை வெறுக்குமளவில் மாறிவிடுவது. 


"மகிழ்ச்சி மீதான வெறுப்பு" ஒரு கட்டத்தில் அவர்களைச் சார்ந்து இருப்பவர்களின் மகிழ்ச்சியையும் பாதிக்கும் வகையில் அமைகிறது. 


அதிகப்படியான மகிழ்ச்சி சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள். 


மகிழ்ச்சியாக இருந்தால் அது கெட்ட சகுணத்திற்கு அறிகுறி என்று நினைத்து தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விதமான மகிழ்ச்சியான நிகழ்வுகளை புறகணிப்பது, 


மகிழ்ச்சியான இடங்களை தவிர்ப்பது மற்றும்


எந்தவொரு வெளி வட்டார தொடர்பின்றி தன்னை தானே வருத்திக் கொள்வது போன்ற நடவடிக்கை மாற்றங்களை அவர்களிடம் பார்க்க முடியும். 


எதை இன்று ஒவ்வொரு மனிதரும் தேடுகிறார்களோ அதையே வெறுக்கும் மனநிலையில் இருப்பது என்பது சாதாரண காரியம் கிடையாது. 


மனநலக் கோளாறுகளின் நோயறிதல் மற்றும் புள்ளியியல் கையேட்டின் (DSM-5) கீழ் செரோபோபியா தற்போது மருத்துவக் கோளாறாக அங்கீகரிக்கப்படவில்லை. 


இருப்பினும், செரோபோபியாவை பல அறிஞர்கள் அறிவியல் ரீதியாக அணுகுகிறார்கள்.மேலும்,உறுதிப்படுத்தவும் முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். 


செரோபோபியா இருப்பவர்களை எப்படி அடையாளம் காணலாம் என்ற ஓர் கேள்வி எல்லாரிடமும் இருக்க வேண்டும். 


கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு எல்லாம் நீங்களே உங்கள் மனதில் ஒரு குறிப்பிட்ட மதிப்பு எண்ணைக் கொடுத்து கொள்ளுங்கள். மொத்த மதிப்பை பொறுத்தே நாம் எந்த நிலையில் இருக்கோம் என்பது தெரிய வந்துவிடும். 



1.மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது பயந்து கொண்டே இருத்தல். 


2.நேர்மறை எண்ணங்களை நம்ப முடியாத நிலை. 


3.மகிழ்ச்சியாக இருப்பதற்கு தகுதியற்றவராக உணர்தல். 


4.மகிழ்ச்சியாக உணரும் போது பாதுக்காப்பின்றி உணர்தல். 


5.மகிழச்சி குறித்து கவலைப்படுதல்.


6.மகிழச்சியாக இருக்கும் போது கெட்டது நடக்க போகிறது என்று உணர்தல். 


செரோபோபியாவிற்கு சிகிச்சை என்னவென்றால் முதலில் மனநல ஆலோசகர் மற்றும் மருத்துவரை அணுக வேண்டும்.செரோபோபியாவிற்கு நிறைய பயிற்சிகள் உண்டு. அவற்றை நாள்தோறும் பழக்கப்படுத்திக் கொள்ளும் போது அவற்றில் இருந்து வெளி வருவது சுலபமான காரியம். 


Worksheets,தசை பயிற்சிகள் ,  relaxation  techniques  , உடற்பயிற்சி மற்றும் உங்களுடைய தற்போதைய Comfort zone - யில் இருந்து வெளிவரும் போது செரோபோபியா தானாகவே குணமாகிவிடும். 


மகிழ்ச்சியாக இருப்பது நமக்கு மட்டுமின்றி நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை. 


- கீர்த்தனா பிருத்விராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி