*பாராட்ட கற்று கொள்ள வேண்டும்.*

 *பாராட்ட கற்று கொள்ள வேண்டும்.*



அதில் பொதுவாகவே நாம் கொஞ்சம் Weakதான்.


நிறைய பேருக்கு அதுதெரியாது.


நம் வேலை முடிந்தால் அடுத்த வேலைக்குபறப்போம்.System அப்படி.


பாராட்டுவதற்கு முதலில் பெரிய மனசு வேண்டும்.


பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும். ஏன் உங்களுக்கே யாராவது பாராட்டினால் பிடிக்கும்.


குழந்தைகள் சிறப்பாக செய்தால் 

சூப்பர்டா குழந்தே என்று பாராட்டி பாருங்கள். குழந்தைகளின் முகம் மலரும். 

அகம் மலரும். ஆனந்தம் மலரும்.


குடும்பத்தாரோடு உணவருந்தும் போது, உணவு சுவையாக இருந்தால் மனம் விட்டு பாராட்டுங்கள். நிறைய பேர் இதை செய்வதில்லை. இயந்திரத்தனமாக தட்டில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் விழுங்குவார்கள். சுபாவத்தை மாற்றி பாருங்கள்.


சுற்றி இருப்பவர்களையும் சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் சங்கோஜமின்றி பாராட்டுங்கள்.


*அவர்கள் மன மகிழ்வோதோடு மட்டுமல்ல, உங்களுக்குள்இருக்கும் மன இறுக்கமும் விலகும்*.


*உங்களுக்கும் உடல் ரீதியில் மனரீதியில் பல நன்மைகள் விளையும்*.


செலவில்லாத ஒரு Best gift.


பொதுவாக உணவகத்திற்கு சென்றால், புறப்படும் போது உணவை பரிமாறிய

Berrerக்கு நன்றி சொல்வது என்பழக்கம். ஆர்டர் எடுக்கும் போதே அவர் பெயரை கேட்டு தெரிந்து கொள்வேன். நல்லா serve பண்ணீங்க முருகேசு என்று சொல்லும் போது அவர் முகமும் அகமும் மலரும்.


The sweetest thing in the world is a person's own name.


பொது அலுவலகங்களில் உதவும் பெண்களிடம் Thank you Meera என்று பெயர் பலகையில் இருக்கும் அவர் பெயரை குறிப்பிட்டு சொல்லுங்கள். கண்கள் அன்பால் விரியும். Welcome Sir என்று ஆத்மார்த்தமாக சொல்வார்கள்.


*உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கனிவாக பேசுங்கள். சூழ்நிலையே மாறும்*.


ஒரு முறை Star Hotel ஒன்றில் நண்பருடன் உணவருந்தும் சந்தர்ப்பம். ஒரு dish மிக அருமையாக இருந்தது. ரசித்து சாப்பிட்டோம்.Bearer வசம் உணவு சிறப்பாக சிறந்தது என்று எங்கள் Compliment ஐ Chief Chefவசம் சொல்லுங்கள் என்று கூறினோம். நாங்கள் Bill pay பண்ணுவதற்குள் Chief Chefஎங்கள் டேபிளுக்கே மகிழ்ச்சியோடு வந்து எங்களுக்கு நன்றி சொன்னார்.


*மிகவும் எளிமை பாராட்டுவது. வாழ்வில் பல மகிழ்ச்சியான தருணங்களை தரும்.*


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி