சர்வதேச சிறுகோள் தினம்
இன்று ஜூன் 30 விண் கற்கள் நாள் (ASTEROIDS) விண்கற்கள் என்றால் என்ன? நமது சூரிய மண்டலத்தின் (SOLAR SYSTEM) செவ்வாய் கோளுக்கும் (MARS) வியாழன் கோளுக்கும் (JUPITER ) இடையே சிறிதும் பெரிதுமான கற்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. இவையே விண்கற்கள் (ASTEROIDS) எனப்படுகின்றன. ... இந்த கற்கள் விண்ணில் இருப்பதனால் இவற்றை விண்கற்கள் என்கிறோம்ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 இல் மக்கள் இத்தினத்தை சர்வதேச சிறுகோள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் மக்களுக்கு விண்கற்கள் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இந்தப் பிரபஞ்ச ஆபத்தில் இருந்து எம்மை எப்படிக் காத்துக்கொள்ளலாம் என்றும் விவாதிக்கின்றனர்.
சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.
Comments