இன்று சாத்தான்குளம் நாள்
ஜூன் 22 இன்று சாத்தான்குளம் நாள்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி சிறையில் அடைத்தனர்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் ஜூன் 22-ம் தேதி இரவு அடுத்தடுத்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். மற்ற 9 பேரும் தொடர்ந்து சிறையில் உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது
Comments