ஒரு பூங்கொத்து உரசி தீ பிடிப்பதெல்லாம்
அவளை என் கைகளால்
தூக்கிய நேரத்தில்
என் எடை என்ன என்றாள்.
இந்த நேரத்தில்..
என் தலை கணத்தைவிட
குறைவு தான் என்றேன்.
வெட்கப்பட்டாள்
வெட்கத்தின் எடையை
கணக்கிட்டு..
இப்போது சற்று அதிகமாக
கணக்கிறாய் என்றேன்.
வெட்கத்தோட சிரித்தாள்.
இன்னும் கணம்
கூடுகிறது என்றேன்.
கைகளை கழுத்தோடு
கட்டிக்கொண்டாள்.
அத்தனை பாரமும்
என் கழுத்தில் இருக்கிறது
என்றேன்.
எப்படி என்றாள் வெள்ளந்தியாக
விம்மி புடைக்கும்
மார்புகளில் சூட்டை
இழக்கவா முடியும்.
உன் கைகளின் மத்தியில்
என் கழுத்திற்கு..
பருத்த இரு உதடுகள் தரும்
முத்தத்தின் எடை
கூடாதா என்றேன்.
ஆடை அவிழ்ந்த அவசரம் போல
புரிந்தவளாய்
சுவற்றுக்கு மயிலிறகால்
வண்ணமடிப்பது போல
ஒரு அருவி
தரை இறங்குவது போல
ச்சீ..என சட்டென இறங்கினாள்.
ஒரு பூங்கொத்து உரசி
தீ பிடிப்பதெல்லாம்
பனி படர்ந்த அந்த காடுகளுக்கு
எப்படித் தெரியும்.
💘💘💘💘💘💘💘💘
நயினார்
Comments